lørdag den 28. november 2009

விஜய் படத்துக்கு பிரபாகரன் சொன்ன டைட்டில்!

தம்பி படத்தை அடுத்து ’கோபம்’ காட்டவிருந்தார் சீமான். ஆனால், சூழ்நிலை அவரை ‘வாழ்த்துகள்’ சொல்ல வைத்தது.

இந்த காலகட்டத்தில் சீமான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்தபோது, ‘’கோபம்’ என்று படம் எடுக்கப்போகிறேன்’ என்று சீமான் சொல்ல,பிரபாகரனுடன் பக்கத்தில் இருந்தவர் ‘சினம்’ என்று தலைப்பு வையுங்கள் என்றாராம்.
அதற்கு பிரபாகரன், ‘கோபம் என்று சொன்னால்தான் அதில் அழுத்தம் இருக்கிறது. ஒரு வேகம் இருக்கிறது. அந்த தலைப்பிலேயே படம் எடுங்கள். அதற்கு என் வாழ்த்துக்கள். ஆனால் வாழ்த்துக்கள் மாதிரி மென்மையான படம் எடுக்க வேண்டாம்’என்று சொன்னாராம்.
அதன்படி சீமான் ‘கோபம்’காட்ட முடிவெடுத்துவிட்டார். நடிகர் விஜய்யும் சீமானுடம் இணைய முடிவெடுத்துவிட்டார்.

vettai aarambam


vijay stil
















fredag den 27. november 2009

விஜய் பிறந்தநாளில் சுறா


சுறா விஜய்யின் ஐம்பதாவது படம். சகல விதத்திலும் படம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அனைவரும் கடுமையாக உழைத்து வருகின்றனர். ஹைதராபாத்தில் நடக்கும்; படப்பிடிப்பைத் தொடர்ந்து டிசம்ப‌ரில் கேரளா செல்கிறது மொத்த யூனிட்டும்.
எஸ்.பி.ராஜகுமார் படத்தை இயக்குகிறார். ஆ‌க்சன் காட்சிகளுக்கு சமமாக காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். முக்கியமாக விஜய், வடிவேலு வரும் காட்சிகள் வயிற்றை பதம்பார்க்கும். 2010 தொடக்கத்திலேயே படம் தயாரானாலும் ஜுன் 22 ஆம் தேதி படத்தை வெளியிட தீர்மானித்திருக்கிறார் தயா‌ரிப்பாளர் சங்கிலி முருகன். அன்றுதான் விஜய்யின் பிறந்தநாள். விஜய் படம் வெளியாக அதைவிட சிறந்த நாள் இருக்க முடியாது.

mandag den 23. november 2009

søndag den 15. november 2009

விஜய், தமன்னா ஆட்டம்


ஹைதராபாத்தில் சுறா படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லன், தேவ் கில். மஹாதீரா படத்தில் வில்லனாக நடித்தவர்.
தெலுங்குப் படத்தில் பிஸியாக இருப்பவர் ஷூட்டிங் ஹைதராபாத்தில் என்பதால் கவலையில்லாமல் கலந்து கொள்வார் என்கிறார்கள். ஹைதராபாத் கிளம்பும்முன் சுறாவின் முக்கிய காட்சிகளை ஏவிஎம் ஸ்டுடியோவில் படமாக்கினர். வேறொன்றுமில்லை, விஜய், தமன்னா ஆடிப்பாடிய பாடல் காட்சிதான் அது.. விஜய் முருகன் உருவாக்கிய காஸ்ட்லி அரங்கில் இந்த ஆட்டம் பாட்டம் படமாக்கப்பட்டது. விஜய் தமன்னாவுடன் ஆடிப் பாடியது இதுதான் முதல்முறை.

mandag den 9. november 2009

fredag den 6. november 2009

unseen stil from vj


Vettaikaaran from Dec 18th!


The Countdown starts....................
super star vijay

torsdag den 5. november 2009

some vijay stills







ஆஸ்கர் தயா‌ரிப்பில் விஜய்



விஜய்யின் 51வது படத்தின் தயா‌ரிப்பாளர், இயக்குனர் யார் என்பதற்கான விடை கிடைத்திருக்கிறது.
விஜய் தற்போது சுறா படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 50வது படம். இதையடுத்து அவர் யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது கேள்விக்குறியாக இருந்தது.
ஜெயம் ராஜாவிடம் கதை கேட்ட விஜய், கண்டிப்பாக படம் பண்ணுவோம் என அவ‌ரிடம் உறுதி அளித்திருந்தார். 49வது படமான வேட்டைக்காரன் தொடங்கிய போதே உறுதி செய்யப்பட்ட விஷயம் இது. இந்நிலையில் லிங்குசாமியும் விஜய்க்காக கதை தயார் செய்து வைத்திருக்கிறார். விஜய் கால்ஷீட் கொடுத்தால் பையாவுக்குப் பிறகு விஜய் படத்தை இயக்கலாம் என்பது லிங்குசாமியின் எண்ணம். ஆனால், முன்பே திட்டமிட்டபடி ஜெயம் ராஜா இயக்கும் படத்தில் நடிப்பதென்று விஜய் முடிவு செய்துள்ளார். இந்தப் படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயா‌ரிக்கிறார். படத்துக்கு இசையமைக்க பலரது பெயர்கள் ப‌ரிசீலனையில் உள்ளன. என்றாலும் தரணின் பெயர்தான் விஜய்யின் சாய்ஸாம். ஈரம் படத்தில் தரணின் இசை விஜய்க்கு பிடித்திருந்ததுதான் இதற்கு காரணமாம்.