mandag den 31. januar 2011

søndag den 30. januar 2011

fredag den 28. januar 2011

onsdag den 26. januar 2011

காவலன் 'சூப்பர் ஹிட்


பொங்கலுக்கு வந்த படங்களில் ஏகப்பட்ட சர்ச்சைகள் மற்றும் தடைகளைத் தாண்டி சூப்பர் ஹிட் என்று அறிவிக்கப்பட்டுள்ளது விஜய் நடித்த காவலன்.

பொங்கலுக்கு காவலன் படம் வருமா? வராதா? என பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஒரு பக்கம் தியேட்டர்காரர்கள் பிரச்சினை செய்ய, மறுபக்கம் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் பின்வாங்க தட்டுத் தடுமாறி ரிலீஸ் செய்தனர் படத்தை.

ஆனால் இன்று படத்துக்கு பிரச்சினை ஏற்படுத்தியவர்களே, படம் குறித்து பாஸிடிவாகப் பேச ஆரம்பித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை முடிந்து இரண்டு வாரங்களாகும் நிலையில் படங்களின் வசூல் நிலவரம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி விஜய்யின் காவலன்தான் இன்றைய தேதிக்கு முதலிடத்தில் உள்ளது. சென்னை போன்ற நகர்ப்புற திரையரங்குகளில் இப்போதும் ஓரளவுக்காவது ஆன்லைன் புக்கிங் இருப்பது காவலனுக்கு மட்டுமே. மற்ற படங்களைப் பொறுத்தவரை, காட்சி நேரத்தின் போதுதான் டிக்கெட் வாங்கவே வருகிறார்கள்.

குறிப்பாக வார இறுதி நாட்களில் காவலன் படம் கிட்டத்தட்ட ஹவுஸ்புல் என்ற நிலை. கிராமத்துப் பகுதிகளில் ரிலீசான பொங்கல் படங்களில் சிறுத்தையும், இளைஞனுக்கும் பெட்டிக்குத் திரும்ப ஆரம்பித்துவிட்டன. ஆனால் காவலன் ஸ்டெடியாக உள்ளதாக, கோவை விநியோகஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

tirsdag den 25. januar 2011

mandag den 24. januar 2011

DINAMALAR kaavalan vimarsanam


சில, பல தோல்விகளுக்கு பின் விஜய் திட்டமிட்டு தந்திருக்கும் வெற்றி படம்தான் "காவலன்"!

அந்த ஏரியாவிலேயே ‌பெரிய மனிதர் ராஜ்கிரண். ஒருகாதலத்தில் அடிதடி வம்பு, வழக்கு என தாதாவாக வாழ்ந்த அவர், ஒரு நம்பி‌க்கை துரோகியை தீர்த்து கட்ட பக்கத்து ஊருக்கு வரும் பொழுது பிரசவலியால் துடிக்கும் ஒரு தாயையும், சேயையும் காபந்து செய்கிறார். அவராலேயே பெயர் சூட்டப்படும் அந்த சேய், வளர்ந்து பெரியவன் ஆனதும் ராஜ்கிரணுக்‌கே காவலுக்கு போகிறான். ராஜ்கிரணோ அவரது மகள் அசினுக்கு அந்த வாலிபனை காவலாக்குகிறார். அந்த காவலனே அசினின் காதலன் ஆவதும், அந்த காவல், காதலால் எழும் விளைவுகளும் தான் "காவலன்" படத்தில் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லப்பட்டிருக்கும் மீதிக்கதை!

நம்பமுடியாத கதை என்றாலும் அதை நம்பும் படியாக செய்து அசினின் காவலனாக, காதலனாக கல்லூரி தோழனாக விஜய் வடிவேலு அண்ட் கோவினருடன் பண்ணும் காமெடி கலாட்டக்கள் விஜய்யும், இயக்குநர் சித்திக்கும் ஏற்கனவே இணைந்த "ப்ரண்ட்ஸ்" படத்தை ஞாபகபடுத்தும் அளவிற்கு கலகலப்பை ஏற்படுத்துவது காவலன் படத்தின் ப்ளஸ்பாயிண்ட். கண்ணதாசனா, காளிதாசனா? பாரதியாரா, பாரதிராஜாவா...? என அடிக்கடி வடிவேலு தானும் குழம்பி, விஜய்யையும் குழப்பும் காட்சிகளில் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது.

விஜய் பக்கம் பக்கமாக பன்ச் டயலாக் பேசி ஹீரோயிசம் காட்டாமல் நடித்திருப்பதுதான் காவலன் படத்தின் பெரியபலம்! அதிலும் தன் காதலி யார்? என்பதை தெரியாமல் நீங்கதான் என் காதலி என்று வைத்துக் கொள்ளுங்களேன் நான் அவகிட்டே எப்படி பேசுவேன்னு.. இப்போ பேசி காட்டுகிறேன்... என்று காதலியை சந்திக்க வந்த இடத்தில் உடன் வரும் அசினின் தோள்பட்டையை பிடித்துக்கொண்டு விஜய் பேசும் காதல் மொழியை விஜய் ஒருவரால் மட்டுமே செய்து காட்ட முடியும். 38வயதில் ஏதோ 25வயது வாலிபர் மாதிரி உடலாலும் மனதாலும் காதலிக்கும் விஜய்க்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப் சொல்லியே தரவேண்டும்! காதல் காட்சிகளில் மட்டுமல்ல ஆக்ஷன் காட்சிகளிலும் புதிய பரிமாணம் காட்டி இருக்கும் விஜய்யை இடையில் ஏற்பட்ட தோல்வி(படங்)கள் ரொம்பவே பண்படுத்தி இருக்கின்றன என்றே சொல்ல வேண்டும்! வாவ் என்ன ஒரு ரொமான்ஸ் என்ன ஒரு ஆக்ஷன், என்ன ஒரு காமெடி சென்ஸ்! கீப் இட் அப் விஜய்!

அசின், ராஜ்கிரணின் மகளாக விஜய்யின் காதலியாக வாழ்ந்திருக்கிறார் அம்மணி. அசினைக்காட்டிலும் அவர் உடன் வரும் மித்ராகுரியன் இரண்டாம் நாயகி என்பதை காட்டிலும் இன்னும் பிரமாதமாக நடித்து அசினையே சில இடங்களில் ஓவர் டேக் செய்துவிடுகிறார்.

ராஜ்கிரண் அப்பா கேரக்டரா? அப்பப்பா கேரக்டரா? என கேட்குமளவிற்கு மிரட்டலான நடிப்பில் மிரளவைக்கிறார். ராஜ்கிரணின் ஜோடி ரோஜாவும் தன் பங்கிற்கு மிரட்டுகிறார். தூங்கி வழியும் எம்.எஸ்.பாஸ்கர், விஜய்யின் அப்பா நிழல்கள் ரவி, அம்மா யுவஸ்ரீ என எல்லோரும் பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு! அம்மாவாசை வடிவேலுவும், அவரது ஜோடி பூங்கொடி நீபாவும் செம காம்பினேஷன்! எல்லாம் சரி விஜய், அசினுடன் கல்லூரியில் படிக்கும் குள்ளநடிகருக்கு "அஞ்சாநெஞ்சன்" என பெயர் வைத்து வம்பை விலைக்கு வாங்கியது யார் விஜய்யா? சித்திக்கா?

வித்யாசாகரின் இசையும் என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும் சித்திக்கின் கதை, திரைக்கதை, இயக்கத்திற்கு பக்கபலமாக இருந்து காவலனை விஜய்யின் காதலுக்கு மரியாதை அளவு உயர்த்தி பிடித்திருக்கின்றன!

மொத்தத்தில் "காவலன்" விஜய் ரசிகர்களுக்கு "காதலன்".

lørdag den 22. januar 2011

onsdag den 19. januar 2011

tirsdag den 18. januar 2011

tirsdag den 11. januar 2011

தயாராகிவரும் வேலாயுதம் :ஜெயம் ராஜா


வேலாயுதம் படப்பிடிப்பு வெகு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்படத்தை இதுவரை இவரை பற்றி இருக்கிற டப்பிங் டைரக்டர் என்ற இமேஜை இந்த படத்தின் மூலம் அடித்து நொறுக்க வேண்டும் என்ற லட்சியமும் இருக்கிறது அவருக்கு.

தனது முதல் பட சென்ட்டிமென்ட் படி இந்த படத்தில் நிறைய ரயில் காட்சிகளையும், ரயில்வே ஸ்டேஷன் காட்சிகளையும் வைத்திருக்கிறாராம். விஜய்யை அழைத்துக் கொண்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு போனால் செக்யூரிடி பிரச்சனை. பர்மிஷன் பிரச்சனை என்று ஏராளமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

அதனால் விசாகப்பட்டினத்தில் சொந்தமாக ஒரு ரயில்வே ஸ்டேஷன் செட்டையை போட சொல்லிவிட்டாராம் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். ஒரே மூச்சில் இந்த காட்சிகளை எடுத்துவிட்டாலும் படம் ரிலீஸ் ஆகிற வரைக்கும் செட்டை பிரிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டிருக்கிறாராம் அவர்.
ஜெயம் ராஜா இயக்குகிறார். அதுவும் தனது சொந்த கதையை இயக்குகிறார்.

mandag den 10. januar 2011

அதிக தியட்டர்களை கைப்பற்றி காவலன் சாதனை!


மிகபெருமளவில் எதிர்பார்க்கப்படும் இளையதளபதி விஜயின் காவலன் திரைப்படம் வரும் வெள்ளிகிழமை வெளியாக இருக்கிறது. இவ் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பல எதிர்ப்புக்களையும் எதிர் நோக்கியுள்ளது. அண்மைகாலமாக காவலன் திரைப்படத்திற்கு வெறும் 70 தியட்டர்கள தான் கிடைத்துள்ளது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. இவ் வதந்திகளை தகர்த்தெறியும் முகமாக காவலன் பெருமளவான தியட்டர்களை தன்வசப்படுத்தியுள்ளது. அந்தவகையில் கேரளாவில் சுமார் 100 திரையரங்குகளை கைப்பற்றியது. ஒரு தமிழ் திரைப்படம் கேரளாவில் 100 திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறையாகும். அத்துடன் மும்பை மாநகரில் சுமார் 65 திரையரங்குகளை கைப்பற்றி அனைவரயும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மும்பையிலும் ஒரு தமிழ் திரைப்படம் இவ்வளவு பெருமளவான திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல் முறை.

மேலும் தமிழ்நாட்டில் 450 திரையரங்குகளை பிடித்துள்ளது.மேலும் திரையரங்குகளை பெற பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தற்போது திரைப்பட விநியோகர் சங்கம் விஜய் பக்கம் நின்று திரையரங்கு உரிமையாளர் பிரச்சனையை சமாளிக்கிறது.

torsdag den 6. januar 2011

tirsdag den 4. januar 2011

விஜயும் திரையரங்க உரிமையாளர்களும்.......





¤நடிகர் விஜய், தமிழ் சினிமா உலகின் தவிர்க்க முடியாத சக்தி. லயோலா கல்லூரியின் கருத்துக் கணிப்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு அடுத்து அதிக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நம்ம தளபதி விஜய். தொடர்ந்து வெற்றிப்படங்களைத் தந்தவர். 2007,2008ல் ஐ.பி.எல் நடத்திய 20/20 கிரிக்கெட் தொடரின் விளம்பர தூதராக இருந்தவர்.
தயாரிப்பாளார்கள், விநியோகஸ்தர்களின் செல்லப்பிள்ளை. இப்படியிருக்கும் வேளையில் திரையரங்க உரிமையாளர் சங்கம் என்ற பெயரில் இளையதளபதி விஜய் நடித்த காவலன் படத்தினை திரையிடுவதக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என அறிக்கை விடுத்துள்ளனர்.

ஏன்? என காரணம் கேட்டால் விஜய் நடித்த சமீபத்திய படங்கள் எமக்கு பெரும் நஷ்டதினை ஏற்படுத்தியுள்ளது அதனால் நஷ்டஈடு தரும் வரைக்கும் திரையிட அவரின் படங்களை விடமாட்டோம் என பதில் தருகின்றனர்.
விஜய் நடித்த அழகியதமிழ்மகன்,குருவி,வில்லு,வேட்டைக்காரன்,சு றா என்பதே விஜயின் சமீபத்திய படங்கள் ஆகும்..
இதில் குருவி,வேட்டைக்காரன்,என்பன நமக்கு நஷ்டதினை ஏற்படுத்தவில்லை இலாபத்தினையே தந்தது என நீங்கள் தானே பத்திரிகையில் பேட்டி கொடுத்தீர்கள்.இப்போது அது எங்கே போனது.. குருவி மிகப்பெரிய வர்த்த வெற்றிப்படம்,வேட்டைக்காரன் வசூலில் புதிய சாதனை என நீங்கள் கூறியது காற்றில் பறந்து போனதா?

¤அத்துடன் வேட்டைக்காரன் 100 நாட்களை தாண்டி ஓடியது என ஒரு பத்திரிகை அண்மையில் செய்தி வெளியிட்டது.. 100 ஓடியுமா உங்களுக்கு நஷ்டத்தினை தந்தது....

¤பிரபல வலைத்தளத்தில் (http://tamilcinema.com/permanent/movies.asp ) வில்லு 100 நாட்கள் முதலுக்கு மோசம் விளைவிக்காமல் ஓடியது என செய்திவெளியிட்டது. அதையும் பாருங்க .....

இவற்றை எல்லாம் பார்த்தால் குழப்பம் தான் மிச்சம்.. இவை எல்லாம் ஏன் நடக்கவேண்டும் இதன் பின்னணி தான் என்ன? எனும் கேள்வியும் எழாமல் இல்லை.
விஜய் மீது காழ்ப்புணர்ச்சியுள்ளவர்களின் தூண்டுதலின் பேரால் இவை நடக்கிறதா?விஜயின் சுறா படத்தின் நஷ்டத்தில் 35% திருப்பி தர வேண்டுமென ஒரு சில விநியோக தரப்பை மட்டும் யார் ஏவிவிட்டார்கள்?

¤ரஜினி,கமல்,விஜய்,அஜித்,சிம்பு,தனுஸ் படம் நல்லா ஓடி அதிகமா லாபம் சம்பாதிச்சா அந்த நடிகர கூப்பிட்டு லாபத்துல பங்கா தாறீங்க...? அந்த நடிகர் நடிச்சதுக்கு தயரிப்பாள்ர்கிட்ட கோடிகோடியா சம்பளம் வாங்கிட்டு போறாரு... நீங்க தயாரிப்பளர்கிட்டஇருந்து விநியோகதர் வாங்குறாரு,அவருகிட்ட இருந்து திரைஅரங்க உரிமையாளர் வாங்குறீங்க...? அப்ப யாரு கிட்ட நீங்க பணத்த திரும்ப வாங்கணும்...?..? இலாபத்தில் நீங்கள் பங்கெடுத்தால் நஷ்டதினை கேட்பது நியாயம்..
விஜயின் எத்தனையோ படங்களில் வசூலை ருசி பார்த்து விட்டு(குருவி, வேட்டைக்காரன் உம் அடங்கும்) இப்போது சுறா படம் மட்டும் கசக்குதா? கொஞ்சம் இதய சுத்தியுடன் செயற்படுங்கள் ...........