mandag den 31. oktober 2011

வேலாயுதம் படத்தை பற்றி கூறுகிறார் நடிகர் விஜய்


நடிகர் விஜய்யின் `வேலாயுதம்' படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது, இதுகுறித்து நடிகர் விஜய் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது நான் நடித்த 52 படங்களை விட `வேலாயுதம்' பெரிய வெற்றியாகியுள்ளது என்கின்றனர், ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றது.
இப்படியொரு அருமையான படம் கொடுத்த இயக்குனர் ராஜாவுக்கு நன்றி, தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக அவர் வருவார்.

ஜெயம்ரவியும் இந்த படத்தின் கதை விவாதத்தில் பங்கேற்றார், ஓஸ்கார் ரவிச்சந்திரன் படத்துக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து கொடுத்தார்.

விஜய் ஆண்டனி ரீ ரிக்கார்டிங் படத்துக்கு பெரிய பலம், படத்துக்கு பிரிண்ட்கள் அதிகம் போடுறாங்க, தியேட்டர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

இந்த படம் வெற்றியானதற்கு எம்.ஜி.ஆர். பார்முலா படத்தில் உள்ளது என்கின்றனர், எம்.ஜி.ஆர். பார்முலாவில் படம் பண்ண எல்லோரும் ஆசைப்படுவர், அது தவறு அல்ல எம்.ஜி.ஆர். பாணியில் நடிக்க நல்ல கதை அமையணும். அது `வேலாயுதம்' படத்தில் இருக்கின்றது என்றார்.

அடுத்து நண்பன் படம் பொங்கலுக்கு வெளியாகயுள்ளது, இணையதளங்களில் வேலாயுதம் படம் வந்ததாக தகவல் வந்தது, அதை தடுக்க எனது ரசிகர்கள் முயற்சி எடுத்துள்ளனர்.

புதுப்படங்களை இது போல் இணையதளத்தில் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

நான் ஒரே பாணியில் நடிப்பதாக சொல்வது தவறு. `காவலன்' படத்தில் என் பாணி இல்லை, சித்திக் வேறு மாதிரி அப்படத்தை எடுத்துள்ளார்.

அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என்று கூறியுள்ளார்.

டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார் நடிகர் விஜய்


நடிகர் விஜய் சின்னத்திரை நிகழ்ச்சியொன்றை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடநாட்டையே தன் கைக்குள் வைத்திருந்த பிரமாண்டமான நிகழ்ச்சிதான் குரோர்பதி.
நிஜமாகவே இந்நிகழ்ச்சியில் வெற்றிபெற்று பணம் சம்பாதித்த புத்திசாலிகள் நிறைய பேர் இருக்கிறார்கள் அங்கே. இந்த நிகழ்ச்சியை நடத்தியவர் அமிதாப்பச்சன் என்பதை தென்நாடும் அறியும்.

இதே போன்றதொரு நிகழ்ச்சியை கோடீஸ்வரன் என்ற தலைப்பில் தமிழில் நடத்தினார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சி தோல்வியில்தான் முடிந்தது.

அதன்பின் இதே மாதிரியான நிகழ்ச்சிகளை வெவ்வேறு சேனல்கள் நடத்திக் கொண்டிருந்தாலும், முக்கியமான சேனல் ஒன்று மீண்டும் கோடீஸ்வரன் டைப் நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டதாம். அதன்படி நிகழ்ச்சியை பிரபலமான ஒருவரை வைத்துதான் நடத்த வேண்டும் என்பது நிகழ்ச்சியாளர்களின் ஒரே எண்ணம்.

நிகழ்ச்சியை நடத்த பல முன்னணி நடிகர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டாலும், அவர்களின் ஒரே சாய்ஸ் விஜய் மட்டுமே. எவ்வளவு கேட்டாலும் தர்றோம் என்று பிளாங்க் செக்கையே நீட்டினார்களாம். மாட்டேன் விஜய்யும், மனசு வைங்க என்று சேனலும் மாறி மாறி பேசியதில் கடைசியில் மனம் இரங்கி வந்தாராம் விஜய்.

søndag den 30. oktober 2011

சர்வதேச முகவராக விஜய்: கௌதம் பேட்டி


யோஹன் அத்தியாயம் ஒன்று திரைப்படத்தில் சர்வதேச முகவராக விஜய் நடிக்கிறார்.
முதன்முதலாக கௌதம் மேனன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கிறார்.
யோஹன் அத்தியாயம் ஒன்று என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சர்வதேச முகவராக நடிக்கிறார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படம் குறித்து கெளதம் மேனன் கூறியதாவது, எனக்கு விஜய்யோடு முதல் சந்திப்பு சரியாக அமையவில்லை.

அடுத்த இரண்டு சந்திப்புகளில் நான் சொன்னது அவரோட எண்ணத்துக்கு எட்டவில்லை. கடைசி சந்திப்பில் இந்தத் தடவை நான் உங்களை விடப்போறது இல்லை. இனி விடவே மாட்டேன்னு அவரே சொன்னார்.

நானும் அவரை வைத்து படம் பண்ண ரொம்ப ஆர்வமாக இருந்தேன். இதன் விளைவே யோஹன் அத்தியாயம் ஒன்று உருவானது. இப்படத்தின் கதாபாத்திரங்கள் விஜய்க்கு புதியது. இப்படம் விஜய்க்கு புதிய வெற்றிப்பாதையை உருவாக்கித்தரும்.

யோஹனுக்கான படப்பிடிப்புகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடக்கவுள்ளது என கௌதம் தெரிவித்துள்ளார்.

lørdag den 29. oktober 2011

விஜய் கலகல பேட்டி


விஜய்யின் வேலாயுதம் பாக்ஸ் ஆஃபிஸில் பெ‌ரிய ஹிட்டாகியிருக்கிறது. கடந்த ஆண்டுகளில் வெளியான விஜய்யின் எந்தப் படத்தைவிடவும் வேலாயுதத்தின் ஓபனிங் மிகப் பிரமாதம் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். விஜய்யின் மாஸ் வேல்யூவை இப்படம் உறுதி செய்திருப்பதால் மனம் கொள்ளாத மகிழ்ச்சியுடன் பத்தி‌ரிகையாளர்களை சந்தித்தார் விஜய். வேலாயுதம் வெற்றிக்குப் பிறகு மீடியாவை சந்திப்பது மகிழ்ச்சியா இருக்கு என்ற பூ‌ரிப்பான பேச்சுடன் உரையாடலை தொடங்கினார் விஜய்.

என்னுடைய 52 படங்களில் வேலாயுதம்தான் பெஸ்டுன்னு எல்லோரும் சொல்றாங்க. கேட்க சந்தோஷமாக இருக்கு. தயா‌ரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனையும் இந்தப் படம் மகிழ்ச்சிப்படுத்தியிருக்கு. இப்போதான் அவரை சந்திச்சிட்டு வர்றேன். ஹேப்பியா சார்னு கேட்டேன். கவலையே இல்லை, படம் சூப்பர்ஹிட். இனி நான் பார்த்துக்கிறேன்னு சொன்னார்.

நீங்க எம்‌ஜிஆர் பாணியில் நடிச்ச படம் இதுதானே?

எம்‌ஜிஆர் பாணியில் நடிக்க யாருக்குதான் விருப்பம் இருக்காது? அது தப்பும் கிடையாது. எம்‌ஜிஆர் பாணியில் படம் பண்ணுறது ரொம்ப கஷ்டம். முதல்ல நல்ல கதை வேணும். அது வேலாயுதம் படத்தில் இருக்கு.

நடிக்க வந்த புதிதில் ர‌ஜினி பாணியில் நடிப்பதா சொன்னீங்க?

எம்‌ஜிஆர், ர‌ஜினி ரெண்டு பே‌ரின் பாணியுமே எவர்கி‌‌ரீன். நான் ஆரம்பத்திலிருந்தே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இதை பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன். அதை நான் மறுக்கலை.

படத்தோட இசை...?

பாடல்கள் எல்லாமே ஹிட். ரொம்ப முக்கியமா விஜய் ஆண்டனியோட ‌ரீரெக்கார்டிங். அது படத்துக்கு பெ‌ரிய பலம். இந்த நேரத்தில் ஜெயம் ரவிக்கு நன்றி சொல்லணும். அவரும் இந்தப் படத்தோட கதை விவாதத்துல பங்கேற்றார். அப்புறம் ராஜாவின் தந்தை எடிட்டர் மோகன் சார். அவரும் பல ஆலோசனைகள் தந்தார். தயா‌ரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஏன் எதுக்குன்னு கேட்காம கேட்ட எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார். இப்படியொரு அருமையான வெற்றியை தந்த இயக்குனர் ராஜாவுக்கு என்னோட நன்றி.

mandag den 17. oktober 2011

பெங்களூரில் அசத்திய விஜய்!


வேலாயுதம் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பெங்களூர் சென்ற இளைய தளபதி விஜய் கன்னடத்தில் பேசி அசத்தியுள்ளார்.

விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள வேலாயுதம் வரும் 26-ம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சி பெங்களூரில் உள்ள பூர்ணிமா திரையரங்கில் நடந்தது. இதில் கலந்து கொண்ட விஜய்க்கு அவரது ரசிகர்கள் பட்டாசு வெடிதது, விசில் பறக்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திரையரங்கமே அதிரும்படி கரகோஷம் எழுப்பினர். இதைப் பார்த்து விஜய் நெகிழ்ந்து போனார்.

மேடையில் பேசிய விஜய் கூறியதாவது,

எல்லாரு சென்னாகிதீரா? (எல்லாரும் நல்லா இருக்கிறீர்களா) என்று கன்னடத்தில் நலம் விசாரிக்க ரசிகர்களுக்கு ஒரே குஷியாகிவிட்டது. பெங்களூர் வந்திருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தமிழகத்தைப் போன்ற வரவேற்பு இங்கும் உள்ளது. இங்குள்ள ரசிகர்கள் எனக்கு எப்பொழுதுமே பேராதரவு அளித்து வருகின்றனர்.

எனது நண்பர் சிவராஜ் குமாரின் 100வது படமான ஜோகையா அறிமுக விழாவுக்கு வந்திருந்தபோது கூட எனக்கு உற்சாக வரவேற்பளித்தீர்கள். நீங்கள் என் படங்கள் எத்தனையோ பார்த்திருப்பீர்கள். ஆனால் வேலாயுதம் அவற்றைவிட வித்தியாசமானது என்றார்.

விஜய் பேசப், பேச ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். விஜய் வருகையால் பூர்ணிமா திரையரங்கு விழாக்கோலம் பூண்டிருந்தது.

தீபாவளி செம விருந்தா இருக்கும் வேலாயுதம்


‘‘எனக்கு எல்லாருடைய படங்களும் பிடிக்கும். ‘மங்காத்தா’வாகட்டும், ‘அங்காடித் தெரு’வாகட்டும் முதல் நாள் முதல் ஷோ பாத்துடுவேன். அதேபோல என் படங்களும் எல்லாத் தரப்பினருக்கும் பிடிக்கணும்னு நினைப்பேன். அதுக்கான உழைப்பு என் எல்லாப்படங்கள்லயும் இருக்கும். அதுல உச்சம் இந்தப்படம்...’’ என்கிறார் ஆஸ்கர் பிலிம்ஸின் ‘வேலாயுதம்’ இயக்குநர் எம்.ராஜா.

‘‘அதிலயும் இதுல விஜய் ஹீரோவாகிட்டதால, அவருக்கேத்த ஹீரோயின்கள், அவருக்கேத்த வில்லன்கள், அவங்க தாங்கற அளவுக்குப் பிரச்னைகள், அதுக்கான பேக்ட்ராப்கள்னு படம் பெரிசா போய்க்கிட்டேயிருந்தது. அது அத்தனைக்கும் ஈடு கொடுத்து ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தா இந்தப் படத்தைக் கொடுக்கிறோம். அதுலயும் செம விருந்தா இருக்கும் ‘வேலாயுதம்’...’’ என்ற ராஜா, கடைசியாக காஷ்மீர் சென்று படத்துக்கான பாடலைப் படம்பிடித்து வந்த அனுபவத்தைச் சொன்னார்.

‘‘காஷ்மீர்ல ஸ்ரீநகர் தாண்டி 200 கிலோமீட்டர்ல இருக்கிற அற்புதமான டூரிஸ்ட் ஸ்பாட் ‘பகல்காம்’. எந்த சீசன்லயும் போகமுடியும்ங்கிறது அந்த இடத்தோட சிறப்பு. ஆனா என்ன ஒண்ணு, அங்கே போக மோட்டார் வாகனங்களால முடியாது. முழுக்க குதிரை சவாரிதான். நாங்க தங்கியிருந்த ஹோட்டல் வாசல்ல கார்கள் போல ஆயிரக்கணக்கில குதிரைகள் சவாரிக்காகக் காத்திருந்ததைப் பார்த்து அசந்து போனோம். விஜய், ஹன்சிகா, ஜெனிலியான்னு நாங்க எல்லாருமே குதிரைல போனது மறக்க முடியாத அனுபவம். அதேபோல காஷ்மீர் கலவர பூமியானதால, ராணுவத்தினர் காவல்ல படம் பிடிச்சதும் த்ரில்லான அனுபவம்.

‘முளைச்சு மூணு இலை விடல...’ங்கிற விவேகா எழுதிய பாடலை அங்கே எடுத்தோம். அந்தப் பாடலோட சிறப்பு... அதுல விஜய், ஹன்சிகா, ஜெனிலியா மூணு பேருமே நடிக்கிறதுதான். ஆனா ஒரு ஹீரோயினோட டூயட் பாடறது இன்னொரு ஹீரோயினுக்குத் தெரியாது. அதை சரியா மேட்ச் பண்ணி அழகா கம்போஸ் பண்ணியிருந்தார் ஷோபி மாஸ்டர். படத்தில வரிசைப்படி நான்காவதா வர்ற இந்தப்பாடல், விஜய்யோட மெலடிகள்லயே அலாதியா அமைஞ்சிருக்கு. பரபரன்னு ஃபாஸ்ட்டா ஆடற விஜய்க்கு இத்தனை மெலடி சாத்தியமான்னுதான் முதல்ல இந்தப்பாடலைக் கேட்கும்போது தோணும். ஆனா சாத்தியப்பட்டுதுங்கிறதுதான் உண்மை. 7&8 ரிதம்னு சொல்லக்கூடிய அற்புதமான மெலடியில விஜய் ஆன்டனி இசைச்சிருக்க இந்தப்பாடல்தான் என்னோட ரேட்டிங்படியே நம்பர் ஒன். விஜய் ஆன்டனியோட மெலடி வரிசைலயும் இந்தப்பாடல் இன்னைக்கு இடம் பிடிச்சிருக்கு..!’’

விஜய் பற்றிப் பேசும்போது சில டெசிபல்கள் சப்தம் கூடியது மென்மையாகப் பேசும் ராஜாவின் பேச்சில்...

‘‘இதுவரை தமிழ்ல வராத கதை இதுங்கிறது போலவே, விஜய் இதுவரை ஏற்காத கேரக்டரை இதுல ஏற்றிருக்கார். அவர் தகுதிக்கு எவ்வளவு இறங்கி நடிக்க முடியுமோ அவ்வளவு இறங்கி நடிச்சிருக்கிறதோட, இதுவரை இத்தனை ஏறி நடிச்சதில்லைங்கிற அளவில ஏறியும் சூப்பர் ஹீரோவாகியிருக்கார். இதுவரை சூப்பர் ஹீரோவான நடிகர்கள் கூட ஃபேன்டஸியாதான் அப்படி ஆகியிருக்காங்க. ஆனா இவர்தான் முதல்முதலா லாஜிக்கா சமுதாயத்துக்காக சூப்பர் ஹீரோவா ஆகியிருக்கார். இந்தப்படத்தோட ஸ்பெஷாலிட்டியே ஹீரோவைப் போல, ஹீரோயின்கள் போல, வில்லன்களைப்போல மக்களும் இதுல கேரக்டர்களா வர்றதுதான்.

சில வசனங்கள் ஹீரோக்களுக்குப் பேர் கொடுக்கும். சில வசனங்கள் ஹீரோக்களால புகழடையும். இதுல அப்படி ஒரு வசனம்... விஜய் பேசற ‘உழைக்கிறவன் வியர்வை தாய்ப்பாலைவிட உயர்வானது...’ இது டிரெய்லர்ல வெளியான நாளிலிருந்தே மத்த டைரக்டர்கள் என்னைக் கூப்பிட்டுப் பாராட்டற அளவுக்கு பவர்ஃபுல்லா அமைஞ்சிடுச்சு. ‘நான் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன். இதுல நீ வேற காட்டு காட்டுன்னு சொல்றே... காட்டாம இருந்தா நல்லா இருக்குமாங்ணா..?’ன்னு அவர் பேசற இன்னொரு வசனம் தியேட்டர்கள்ல பட்டையைக் கிளப்பும்னு நம்பலாம்.

இதுல எந்த அளவுக்கு விஜய் இன்வால்வ் ஆகியிருந்தார்னா, பால்காரரா வர்ற அவருக்கு ஒரு சண்டை இருக்கு. அதுல இறங்கி அடிக்கணும்ங்கிறதால சட்டை போடாத வெற்று உடம்போட அவர் அதை செய்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். அதுக்காக ஒருமாசம் பிரேக் விட்டு அவரை உடம்பை ஏத்தச் சொல்லலாம்னு நானே முடிவு கட்டி அவர்கிட்ட விஷயத்தைச் சொன்னேன். அவர் உடனே சட்டையைக் கழற்றி, ‘இந்த அளவுக்கு இருந்தா போது மா..?’ன்னு கேட்டப்ப என் கண்களையே நம்ப முடியலை. அத்தனை கட்டுமஸ்தா ஏத்தி வச்சு அந்த ஃபைட்டுக்காகக் காத்திருந்தார். அவர் மேல சட்டை போட்டிருக்கும்போது அந்த உடம்பு தெரியலை. சட்டையைக் கழற்றினா கும்முன்னு தெரியறார். பேர் பாடியோட ஃபைட் யோசிச்சது நல்லதா போச்சு. இல்லாட்டி அந்த ஸ்பெஷல் விஷயத்தை ரசிகர்கள் மிஸ் பண்ணியிருப்பாங்கன்னு நினைச்சுக்கிட்டேன். படத்துக்கே ஹைலைட்டா ஆகியிருக்கு அந்த ஃபைட்.

இந்தப் படத்துக்குப் பிறகு ஸ்டன்ட் மாஸ்டர் செல்வா பெரிய இடத்துக்குப் போவார். ப்ரியனோட ஒளிப்பதிவும், வி.டி.விஜயனோட எடிட்டிங்கும் எனக்குத் தோள் கொடுத்திருக்குன்னா, புரட்யூசர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் என் கனவுகளை நிஜமாக்க உதவியிருக்கார். அதோட ரிசல்ட், சென்சார்ல படத்தைப் பார்த்தவங்க பாராட்டி சர்டிபிகேட் கொடுத்திருக்கிறதுதான். மக்கள் சர்டிபிகேட்டும் இதுக்குக் குறைவிருக்காதுன்னு நான் எதிர்பார்க்கிறது போலவே ரசிகர்களும் இந்தப் படத்தை தீபாவளி ட்ரீட்டா எதிர்பார்க்கலாம்.

fredag den 14. oktober 2011

வேலாயுதம் யுஎஸ்ஏ ரைட்ஸ்


பெ‌ரிய நடிகர்களின் படங்களின் வெளிநாட்டு உ‌ரிமைக்கு மிகப்பெ‌ரிய அளவில் போட்டி உள்ளது. இளம் நடிகர்களில் விஜய் படத்துக்கு டிமாண்ட் அதிகம்.

வேலாயுதம் படத்தின் யுஎஸ் உ‌ரிமையை பெ‌ரிய போட்டிக்குப் பின் ‌ஜிகே மீடியா வாங்கியுள்ளது. இவர்கள் பல சலுகைகளையும் அறிவித்ததுள்ளனர். முதலில் டிக்கெட் கட்டணம். பத்து டாலர்தான் ஒரு டிக்கெட்டின் விலை. அடுத்து 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு டிக்கெட் எடுக்கத் தேவையில்லை.

இதுவரை வெளியான விஜய் படங்களைவிட அதிக வசூலை அமெ‌ரிக்காவில் வேலாயுதம் பெறும் என்கிறார்கள்.

onsdag den 12. oktober 2011

விஜயுடன் மீண்டும் நடிக்க ஆர்வம்: ப்ரியங்கா சோப்ரா


பாலிவுட் நடிகையாக இருந்தாலும் ப்ரியங்கா சோப்ரா முதன் முதலில் கதாநாயகியாக களமிறங்கியது கொலிவுட்டில் தான்.
விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வந்து கொண்டிருக்கும் ப்ரியங்கா சோப்ரா தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் கொண்டுள்ளார்.என்னுடைய முதல்பட நடிகர் விஜயுடன் மீண்டும் நடிக்க ஆவலாய் இருப்பதாக கூறியுள்ளார். கடந்த சிலதினங்களுக்கு முன் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கட் இறுதிபோட்டியை காண வந்திருந்தார்.

அப்போது பேட்டியளித்த ப்ரியங்கா சினிமாவில் நான் அறிமுகமானது கொலிவுட்டில் தான். முதல்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்தேன். விஜய் மீது எனக்கு எப்பவும் தனி விருப்பம் உண்டு.

அவருடன் நடித்ததை என்னால் மறக்க முடியாது. விஜய் மட்டுமல்லாது இங்குள்ள பல நடிகர்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். தமிழ் சினிமா முன்பை விட தற்போது பலமடங்கு மாற்றம் கண்டுள்ளது.

சமீபத்திய சில தமிழ் படங்களை பார்த்து வியந்து போனேன். எனக்கும் தமிழ் படங்களில் நடிக்கவும், குறிப்பாக என்னுடைய முதல் நடிகர் விஜயுடன் மீண்டும் நடிக்க ஆர்வமாய் இருக்கிறேன்.

எனது கனவு நிறைவேறினால் மிகழ்ச்சியடைவேன்

søndag den 9. oktober 2011

யோஹன் அத்தியாயம் ஒன்றின் கூட்டணி இரகசியம்


யோஹன் அத்தியாயம் ஒன்றின் கூட்டணிக்கு முக்கிய காரணமே ஏ.எம் ரத்னம் தான் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.
கெளதம் வாசுதேவ் மேனன் தயாரித்து இயக்கும் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் விஜய் நடித்து வருவது நாம் அனைவருக்கும் தெரிந்த விடயம்.
ஆனால் இந்த கூட்டணியை சேர்த்து வைத்தது ஏ.எம்.ரத்னம் என்பது நாம் யாருக்கும் தெரியாது.

விஜய்யிடம் கால்ஷீட் வாங்கி இயக்குனர் கெளதமை ஆலோசனைக்காக உட்கார வைத்தது ஏ.எம்.ரத்னம்தான் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.

கதை விஜய்க்குப் பிடித்துப்போனதால், படத்தை நானே தயாரிக்கிறேன் என்று படத்தை கெளதம் ஆரம்பித்துவிட்டாராம்.

படப்பிடிப்புகள் அமெரிக்காவில் ஆரம்பமாகி ஐரோப்பாவில் முக்கிய இடங்களிலும் எடுக்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான படப்பிடிப்புகள் நியூயார்க்கில் எடுக்கப்படுகிறது.