fredag den 25. november 2011

விஜய் நடிக்கும் ஏ.ஆர்.முருகதாஸின் துப்பாக்கி


விஜய் நடிக்கும் ஏ.ஆர்.முருகதாஸின் துப்பாக்கி]
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்திற்கு "துப்பாக்கி" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேலாயுதம், நண்பன் படங்களைத் தொடர்ந்து விஜய், அடுத்து டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி தான்.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ஆரம்பத்தில் ஜெமினி பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்த இப்படத்தை, இப்போது கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்க இருக்கிறது. இந்நிலையில் படத்திற்கு துப்பாக்கி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கமல் நடிப்பில் வெளிவந்த நாயகன் பட பாணியில், இந்தபடம் உருவாக இருப்பதாகவும், படத்திற்கு பட்ஜெட் ரூ.65 கோடி என்றும் கூறப்படுகிறது. விஜய் படத்துக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

torsdag den 17. november 2011

søndag den 6. november 2011

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்


வேலாயுதம் படத்தின் வெளிநாட்டு உரிமையை ஐங்கரன் நிறுவனம் வாங்கி, படத்தை பிரித்தானியாவில் வெளியிட்டுள்ளது.

இளையதளபதி விஜய், ஹன்சிகா, ஜெனிலியா நடிப்பில் வெளிவந்த படம் வேலாயுதம். இப்படத்தை ஜெயம் ராஜா இயக்க, ஓஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார்.
இப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது.

முதல் வாரத்தை விட இரண்டாம் வாரத்தில் அதிக தியேட்டர்களில் வெளியாகி இருப்பதால், அந்த சந்தோஷத்தை கொண்டாட படக்குழுவினருக்கு தனது வீட்டில் விருந்தளித்தார் விஜய்.

வேலாயுதம் படத்தின் வெளிநாட்டு உரிமையை ஐங்கரன் நிறுவனம் வாங்கியிருப்பதால் ரசிகர்களும், படக்குழுவினர்களும் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.

பிரித்தானியாவில் வேலாயுதம் 17 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு(ஒக்டோபர் 26-30 வரை) ரூ.1.03 கோடி வசூலித்து உள்ளது. அதே நேரம் ஏழாம் அறிவு திரைப்படம் 19 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு(ஒக்டோபர் 26-30 வரை) 85.77 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது.

வேலாயுதம் படத்தின் இந்த வெற்றியால் சந்தோஷத்தில் இருக்கும் விஜய், அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் நண்பன் படத்தினையும் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

வேலாயுதம் படத்தின் இந்த வெற்றியால் மீண்டும் விஜய்- ஜெயம் ராஜா கூட்டணி சேர வாய்ப்புள்ளது என்று கொலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

fredag den 4. november 2011

வெளிநாட்டில் வேலாயுதம் முன்னணி


யுகே பாக்ஸ் ஆஃபிஸில் வேலாயுதம் நல்லதொரு இடத்தைப் பிடித்துள்ளது. இப்படம் வெளியான முதல் ஐந்து தினங்களில் 17 திரையிடல்களில் 1.03 கோடியை வசூலித்துள்ளது. விஜய் படம் குறுகிய நாளில் ஒரு கோடியை தாண்டுவது யுகேயில் இதுவே முதல் முறை.

7ஆம் அறிவு முதல் ஐந்து தினங்களில் 19 திரையிடல்களில் 85.77 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இரு காட்சிகள் அதிகமிருந்தும் வேலாயுதத்தைவிட குறைவாகவே வசூலித்துள்ளது.

tirsdag den 1. november 2011

வேலாயுத குழுவிற்கு விருந்து கொடுத்து அசத்திய விஜய்


விஜய், ஹன்சிகா, ஜெனிலியா நடித்த வேலாயுதம் படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படம் தமிழகமெங்கும் வெற்றிகரமாக ஓடுவதாக விஜய் தெரிவித்தார். கேரளாவில் அதிக பிரிண்ட்களுடன் கூடுதல் திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் சுமார் 830 திரையரங்குகளில் திரையிடப்பட்டு உள்ள இப்படம் முதல் ஐந்து நாட்களில் ரூ.40 கோடி வசூல் ஈட்டியதாக கூறப்படுகிறது.

வேலாயுதம் வெற்றி பெற்றதற்காக விஜய் தனது வீட்டில் அப்படக்குழுவினருக்கு விசேஷ விருந்து அளித்தார்.

இவ்விருந்தில் இயக்குனர் ராஜா, இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இப்படத்தின் கதை விவாதத்தில் கலந்து கொண்ட ஜெயம்ரவியும் விருந்திற்கு வந்திருந்தார்.

தமிழகம் முழுவதும் வேலாயுதம் படம் திரையிடப்படும் தியேட்டர்கள் எண்ணிக்கை கூடியுள்ளது.

சென்னை வடபழனியில் 7 ஆம் அறிவு படம் திரையிடப்பட்ட கமலா திரையரங்கில் தற்போது வேலாயுதம் படம் திரையிடப்பட்டுள்ளது.

அத்திரையரங்கிற்கு விஜய் ரசிகர்கள் வடபழனி கோவிலில் மொட்டை அடித்து விட்டு ஊர்வலமாக வந்து படம் பார்த்தனர். இதில் பால் குட ஊர்வலமும் நடந்தது.

இயக்குனர் ராஜாவும் இத்திரையரங்கில் ரசிகர்களுடன் வந்து படம் பார்த்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

வேலாயுதமும் 40 கோடியும்


விஜய் நடிப்பில் தீபாவளி தினத்தன்று வெளிவந்த படம் 'வேலாயுதம்'. ஜெயம் ராஜா இயக்க, ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து வெளியிட்டார்.

'ஏழாம் அறிவு' படத்துடன் 'வேலாயுதம்' படம் போட்டியிட்டது. ஏழாம் அறிவு படம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும், 'வேலாயுதம்' 800க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும் வெளியிடப்பட்டது.

'ஏழாம் அறிவு' நேற்று வரை ( அக்டோபர் 31 ) 40.25 கோடியும், 'வேலாயுதம்' 40 கோடியும் வசூல் செய்துள்ளன. குறைந்த தியேட்டர்களில் வெளியிட்டாலும் 40 கோடி வசூல் செய்ததால் விஜய் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்.

விஜய் இதற்காக தனது வீட்டில் ஜெயம் ராஜா, ஜெயம் ரவி, விஜய் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினருக்கு விருந்து அளித்தார். சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் இரண்டு அரங்கத்திலும் 'ஏழாம் அறிவு' படத்தினை திரையிட்டு இருந்தார்கள். இன்று முதல் அதில் ஒரு அரங்கில் 'ஏழாம் அறிவு'க்கு பதிலாக 'வேலாயுதம்' திரையிட்டு இருக்கிறார்கள்.

இரண்டாம் வாரத்தில் நிறைய தியேட்டர்களில் 'வேலாயுதம்' படத்தினை திரையிட முன்வந்ததை அடுத்து கடும் சந்தோஷத்தில் இருக்கிறாராம் விஜய்.