lørdag den 19. marts 2011

விஜய் படங்கள்


பெரியநடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கவே பெரிதும் விரும்புவார்கள் இசையமைப்பாளர்கள்.
அந்த வாய்ப்பு தமனுக்கு சீக்கிரமாகவே அமைந்திருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் ஐந்துபேரில் ஒருவராக நடித்த தமன், இப்போது இசையமைப்பாளராக இருக்கிறார். பல படங்களில் அவர் இசையமைத்தும் இன்னும் அவருக்குச் சரியான அடையாளம் கிடைக்கவில்லை.

இப்போது அவருடைய குறையைப் போக்கும் வண்ணம் விஜய் நடிக்கும் படமொன்றிற்கு அவர் இசையமைக்கவிருக்கிறார். விஜய் இப்போது வேலாயுதம் படத்தை முடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இதற்குப் பிறகு சூப்பர்குட்பிலிம்ஸ் சௌத்ரி தயாரிப்பில் ஷங்கருடைய உதவியாளர் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறாராம். அந்தப் படத்துக்குத்தான் இசையமைப்பாளராக தமனை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.

இயக்குநரும் தயாரிப்பாளரும் இதை முடிவு செய்து விஜய்யிடமும் கேட்டிருக்கிறார்கள். அவரும் தமன் இசைக்குச் சம்மதம் சொல்லிவடவே இப்போது பாடல் கம்போஸிங் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றனவாம்.

tirsdag den 15. marts 2011

அரசியலுக்கு விஜய்....?


சத்யராஜ், விக்ராந்த், பானு மற்றும் பலர் இணைந்து நடித்து இருக்கும் படம் சட்டப்படி குற்றம். இதனை விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரன் தயாரித்து இயக்கி இருக்கிறார். விஜய் ஆண்டனி இசை அமைத்து இருக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளீயிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இயக்குனர் சீமான் :

விஜய் அரசியலுக்கு கண்டிப்பாக வர வேண்டும். நல்லவர்கள் அரசியலுக்கு வர பயப்படுவதால் தான் அரசியலில் உள்ளவர்கள் அனைவரும் திருடர்களாக இருக்கிறார்கள்.

கற்றவர்கள் அரசியலுக்கு வரவில்லை. எவன் மண்ணையும் மக்களையும் தனது உயிர் போல் நினைக்கிறானோ அவன் தான் அரசியலுக்கு வர வேண்டும். ஆகவே விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வந்து சேவை செய்ய வேண்டும்.

நடிகர் சத்யராஜ் :

விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும். சிவாஜி அரசியலுக்கு வந்து சோபிக்க வில்லை என்று சொன்னார்கள் ஏன் எம்.ஜி.ஆர் வர வில்லையா?. எம்.ஜி.ஆர் எவ்வாறு சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்து சேவை ஆற்றினாரோ அதைப் போல் விஜய்யும் வர வேண்டும் .

அதற்கான ஆலோசனைகளை அவருக்கு அவரது அப்பா எப்போதோ கற்றுக் கொடுத்து விட்டார். அதனை அடுத்து, சீமான் இயக்கத்தில் பகலவன் படத்தில் நடிக்க இருக்கிறார். அவர் கொஞ்சம் கற்றுக் கொடுத்து இருப்பார். அதனால் தான் இது வரை அமைதியாக இருந்து வந்த விஜய் நாகப்பட்டினத்தில் போய் "உலக வரைப்படத்தில் இலங்கை நாடே இல்லாமல் போய்விடும்" என்று பேசி இருக்கிறார்.

இந்த படத்தை பார்த்து விட்டு தாணு எனக்கு போன் பண்ணினார். 'நன்றாக இருக்கிறது. நீங்கள் நடித்த பாத்திரத்தில் மட்டும் விஜய் நடித்து இருந்தால் இத்திரைப்படம் வெளிவந்த உடன் கண்டிப்பாக தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக வந்து இருப்பார்' என்றார். அதற்காக தான் சீமான், நீங்கள், விஜய் இணையும் பகலவன் படம் இருக்கிறதே!

lørdag den 12. marts 2011

பொன்னின் செல்வன் நாயகி அனுஷ்கா


மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் நாயகியாக அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


விஜய்யின் ஜோடியாக, குந்தவை வேடத்தில் நடிப்பவர் இவரே.

இந்தப் படத்தில் அனுஷ்காவுக்கு இணையாக மேலும் சில நாயகிகளும் நடிக்க உள்ளனர். அதற்கான தேர்வு நடந்து வருகிறது.

மகேஷ்பாபு, ஆர்யா மற்றும் முன்னணி நடிகர்கள் இணையும் பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய பிரபல நாவலைத் தழுவி எடுக்கப்படுகிறது.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவனும், கலை இயக்குநராக சாபு சிரிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.

søndag den 20. februar 2011

fredag den 18. februar 2011

onsdag den 16. februar 2011

யுகே-யில் காவலன்


யுகே-யில் காவலன் குறிப்பிடத்தகுந்த வசூலைப் பெற்றிருக்கிறது. இந்த வருடம் வெளியான தமிழ்ப் படங்களில் காவலனுக்குதான் அதிக வசூல் என்பது விஜய் தரப்புக்கு சந்தோஷம் தரும் செய்தி.

2வது வார இறுதியில் காவலன் யுகே பாக்ஸ் ஆஃபிஸில் 29வது இடத்தைப் பிடித்திருந்தது. 3வது வார இறுதியில் 35வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 3வது வார இறுதியில் இதன் யுகே வசூல் 8,346 பவுண்ட்கள். ஒன்பது திரையிடல்களின் மூலம் இந்த வசூலை பெற்றிருக்கிறது.

இதுவரை காவலன் வசூலித்த மொத்த தொகை 1,19,998 பவுண்ட்கள். அதாவது நமது ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 87.74 லட்சங்கள். ர‌ஜினி, கமல் படங்களுக்கு அடுத்து விஜய் படங்களுக்கே யுகே-யில் அதிக வரவேற்பு என்பதை இந்த வசூல் உறுதி செய்திருக்கிறது.

fredag den 11. februar 2011

ஒட்டு மொத்த தமிழ் நாட்டு வசூல் காவலன் 21கோடி


மூன்று ஆண்டுகள் கழித்தே விஜய் அரசியலுக்கு வருவார் என்று அவரது அப்பா சொன்னாலும்,

தேர்தல் நேரத்தில் என்ன அலை அடிக்கிறது என்பதைப் பார்த்து அதிரடியாக தனது அரசியல் எண்ட்ரியை தொடங்க இருக்கிறார் விஜய்என்று நம்பகமான தகவல் கிடைக்கிறது
அதிமுகவுக்கு சாதகமான அலை இருக்கும் பட்சத்தில் அதிமுகவுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பதன் மூலம் தனது நிஜ அரசியல் எண்ட்ரியை தொடங்குவார் என்கிறது அந்த நம்பகமான செய்தி.

பிப்ரவரியில் திருச்சியில் நடைபெற இருந்த விஜய் ரசிகர் மன்ற மாநாட்டை கேன்சல் செய்து விட்ட ஏமாற்றத்தில் இருக்கும் ரசிகர்களை சுற்றுப்பயனம் மூலம் சந்திக்க இருந்த விஜய்,

அதையும் தற்போது ரத்து செய்து விட்டாராம். காரணம் தேவையில்லாமல் இப்போது அலைய வேண்டாம். பிரச்சாரம் சூடு பிடிக்கும் சமயத்தில் அதிமுக ஆதரவு பயணமாக அதை வைத்துக் கொள்ளுங்கள். மன்ற வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி தேவையோ அதில் எந்த பேரமும் இல்லாமல் கொடுக்கத் தயார் என்று கூறிவிட்டார்களாம் அதிமுக தலைமை தரப்பில். இதனால் செம உற்சாகத்தில் இருக்கிறது விஜய் மன்ற வட்டாரம்.

இது ஒருபுறம் இருக்க... பொங்கல் ரிலீஸில் பாக்ஸ் ஆபீஸில் வசூல் அள்ளிக்கொண்டிருப்பது சிறுத்தையா இல்லை காவலனா என்று அறிவிக்க கணக்கு வழக்கு பார்த்த்தில் சிறுத்தையை பின்னுக்கு தள்ளிவிட்டாரம் காவலன்.

இதுவரை 21 கோடி வசூல் செய்திருக்கிறதாம் காவலன். சிறுத்தை 16 கோடி. விஜய் கிட்ட மோத முடியுமா என்கிறார்கள் கனிசமாக லாபம் பார்த்து வரும் விநியோகஸ்தர்கள்.!