lørdag den 30. maj 2009

விஜய்யோடு ஜோடி சேரப்போகிறாரா சினேகா?



விஜய்யோட ஐம்பதாவது படத்திலே அவருக்கு ஜோடியா நடிக்கப் போவது தமன்னா! (செய்தி ரொம்ப பழசுங்...ணா) படத்திலே இன்னொரு ஹீரோயினும் இருக்கக்கூடும்ங்கிறாங்க.
அது யாருங்கிறதுதான் கேள்வி மேல கேள்வியா இருக்கு கோலிவுட்லே! சஸ்பென்சை அவங்களா உடைக்குறதுக்குள்ளே இன்னும் என்னென்னா சொல்வாங்களோ? நம்ம காதிலே விழுந்ததையும் சொல்லி தொலைச்சுருவோம். நடந்துச்சுன்னா மார் தட்டிக்கலாமே! நடக்கலேன்னா...? மனுஷனுக்குதான் மறதிங்கிற பெரிய சொத்து இருக்கே, அனுபவிக்கட்டும். விடுங்ணா... அந்த ரெண்டாவது ஹீரோயினுக்கு இப்போதிலிருந்தே உன்னைப்பிடி, என்னைப்பிடி போராட்டமாம். பின் சந்து வழியா ப்ரியாமணி கூட, 'உள்ளேன் ஐயா' சொல்றதா தகவல். இன்னொரு பக்கத்திலேயிருந்து ஸ்ரேயாவும் பிரஷ்ஷர் கொடுக்கிறாராங்களாம். இவங்கள்ளாம் போட்டி போடுறதை பார்த்தா மாசத்துக்கு முப்பது நாளுதானேங்கிற சந்தேகமே வருது. எப்படிதான் நேரம் கிடைக்குதோ? இவங்க போட்டியெல்லாம் ஒரு பக்கம் இருக்க, 'சினேகாவை பார்க்கலாமே' என்று தளபதிகிட்டேயிருந்தே சிக்னல் கிடைச்சிருக்காம்! ஆமாவா? ஆமாவா? ஆமாவா? சினேகா பக்கம் கேள்வியை அனுப்பினால் 'பொறுத்திருந்து பாருங்க' என்று கண் சிமிட்டுகிறார்கள். யாராவது புலனாய்வு புலிங்க இருந்தா அந்த பக்கம் மூக்கை நுழைச்சு பாருங்கப்பா...!

மீனவனாக விஜய்


மீனவனாக விஜய் நடிக்கிறார் என்பது, விஜய்யின் ஐம்பதாவது படத்தைப் பற்றி வந்திருக்கும் புதிய தகவல். வேட்டைக்காரன் விஜய்யின் நாற்பத்தியொன்பதாவது படம். விஜய்யின் சினிமா கேரியரில் திருப்புமுனையாக அமைந்த காதலுக்கு மரியாதையை தயாரித்த சங்கிலி முருகன் ஐம்பதாவது படத்தை தயாரிக்கிறார் என்பதும், எஸ்.பி. ராஜ்குமார் எழுதிய கதையே படமாகப் போகிறது என்பதும் பழைய செய்திகள். சமீபத்திய தகவல், ஐம்பதாவது படத்தில் மீனவராக நடிக்கிறாராம் விஜய். எம்.ஜி.ஆர். மீனவராக நடித்த படகோட்டி பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த சென்டிமெண்ட்டா தெரியவில்லை. விஜய் படத்துக்கும் எம்.ஜி.ஆர். பட டைட்டிலையே தேர்வு செய்ய உள்ளனர். அனேகமாக அது உரிமைக்குரலாக இருக்கலாம். படத்தை இயக்க பேரரசு ஒரு கோடி கேட்டதால் வேறு இயக்குனரை தேடி வருகிறார்கள்.

onsdag den 13. maj 2009

vijay stil
















விஜய்யின் 50வது படத்தில் அவருக்கு ஜோடியாகிறார் தமன்னா.

விஜய்யின் ஜோடியாகிறார் தமன்னா. விஜய் நடிக்கப் போகும் அவரது 50வது படத்தில் தமன்னாதான் ஜோடியாம். படிக்காதவன், அயன் என இரு ஹிட் படங்களைக் கொடுத்ததால் தமன்னாவுக்கு இப்போது ஏகப்பட்ட டிமான்ட். கை நிறையப் படங்களுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் கண்டேன் காதலை, பையா ஆகியவை பெரிய பட்ஜெட் படங்கள். அடுத்த வாரம் விஜய் படத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறாராம் தமன்னா. இப்படத்துக்காக பெரிய சம்பளத்தைத் தருகிறார்களாம். சங்கிலி முருகனின் மீனாட்சி ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கப் போகிறது. எனவே கண்டிப்பாக இசைஞானி இளையராஜாதான் இசையமைப்பார் எனத் தெரிகிறது. இதே நிறுவனம்தான் விஜய்க்கு பெரும் ஹிட்டாக அமைந்த காதலுக்கு மரியாதை படத்தைக் கொடுத்த பட நிறுவனம் என்பது நினைவிருக்கலாம்.

torsdag den 7. maj 2009

சென்டிமெண்டில் விஜய்யின் 50வது படம்

நடிகர் விஜய்யின் 50வது படத்தை யார் யாரோ இயக்கப் போவதாகவும், தயாரிக்கப் போவதாகவும் தினம் ஒரு செய்தி வந்து கொண்டிருந்தன. ஆனால், தற்போது சங்கிலி முருகன் தயாரிக்கிறார் என்பது உறுதியாகத் தெரிகிறது. இவர் ஏற்கனவே விஜயை வைத்து 'காதலுக்கு மரியாதை' என்ற படத்தை தயாரித்தவர். விஜய் ஒரு சிறந்த நடிகர் என்று அனைவராலும் ஒப்புக்கொள்ள வைக்கப்பட்ட படமும் ஆகும். இப்படத்தை இயக்கப் போவது ஜெயம் ராஜா. மேலும் சங்கிலி முருகன் தற்போது தயாரித்துக் கொண்டிருக்கும் படமான 'அழகர் மலை' படத்தின் இயக்குனர் எஸ்.பி. ராஜ்குமார்தான் விஜயின் 50வது படத்துக்கு வசனம் எழுதவிருக்கிறார். இவர் ஏற்கனவே 'என் புருஷன் குழந்தை மாதிரி' படத்தை இயக்கியவர். விஜய், சங்கிலி முருகன் படத்தில் நடிக்க சென்டிமெண்டும் ஒரு காரணம். காதலுக்கு மரியாதை போல இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி அடையும் என்பதற்காகத்தான்.

tirsdag den 5. maj 2009

søndag den 3. maj 2009