lørdag den 19. marts 2011

விஜய் படங்கள்


பெரியநடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கவே பெரிதும் விரும்புவார்கள் இசையமைப்பாளர்கள்.
அந்த வாய்ப்பு தமனுக்கு சீக்கிரமாகவே அமைந்திருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் ஐந்துபேரில் ஒருவராக நடித்த தமன், இப்போது இசையமைப்பாளராக இருக்கிறார். பல படங்களில் அவர் இசையமைத்தும் இன்னும் அவருக்குச் சரியான அடையாளம் கிடைக்கவில்லை.

இப்போது அவருடைய குறையைப் போக்கும் வண்ணம் விஜய் நடிக்கும் படமொன்றிற்கு அவர் இசையமைக்கவிருக்கிறார். விஜய் இப்போது வேலாயுதம் படத்தை முடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இதற்குப் பிறகு சூப்பர்குட்பிலிம்ஸ் சௌத்ரி தயாரிப்பில் ஷங்கருடைய உதவியாளர் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறாராம். அந்தப் படத்துக்குத்தான் இசையமைப்பாளராக தமனை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.

இயக்குநரும் தயாரிப்பாளரும் இதை முடிவு செய்து விஜய்யிடமும் கேட்டிருக்கிறார்கள். அவரும் தமன் இசைக்குச் சம்மதம் சொல்லிவடவே இப்போது பாடல் கம்போஸிங் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றனவாம்.

tirsdag den 15. marts 2011

அரசியலுக்கு விஜய்....?


சத்யராஜ், விக்ராந்த், பானு மற்றும் பலர் இணைந்து நடித்து இருக்கும் படம் சட்டப்படி குற்றம். இதனை விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரன் தயாரித்து இயக்கி இருக்கிறார். விஜய் ஆண்டனி இசை அமைத்து இருக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளீயிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இயக்குனர் சீமான் :

விஜய் அரசியலுக்கு கண்டிப்பாக வர வேண்டும். நல்லவர்கள் அரசியலுக்கு வர பயப்படுவதால் தான் அரசியலில் உள்ளவர்கள் அனைவரும் திருடர்களாக இருக்கிறார்கள்.

கற்றவர்கள் அரசியலுக்கு வரவில்லை. எவன் மண்ணையும் மக்களையும் தனது உயிர் போல் நினைக்கிறானோ அவன் தான் அரசியலுக்கு வர வேண்டும். ஆகவே விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வந்து சேவை செய்ய வேண்டும்.

நடிகர் சத்யராஜ் :

விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும். சிவாஜி அரசியலுக்கு வந்து சோபிக்க வில்லை என்று சொன்னார்கள் ஏன் எம்.ஜி.ஆர் வர வில்லையா?. எம்.ஜி.ஆர் எவ்வாறு சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்து சேவை ஆற்றினாரோ அதைப் போல் விஜய்யும் வர வேண்டும் .

அதற்கான ஆலோசனைகளை அவருக்கு அவரது அப்பா எப்போதோ கற்றுக் கொடுத்து விட்டார். அதனை அடுத்து, சீமான் இயக்கத்தில் பகலவன் படத்தில் நடிக்க இருக்கிறார். அவர் கொஞ்சம் கற்றுக் கொடுத்து இருப்பார். அதனால் தான் இது வரை அமைதியாக இருந்து வந்த விஜய் நாகப்பட்டினத்தில் போய் "உலக வரைப்படத்தில் இலங்கை நாடே இல்லாமல் போய்விடும்" என்று பேசி இருக்கிறார்.

இந்த படத்தை பார்த்து விட்டு தாணு எனக்கு போன் பண்ணினார். 'நன்றாக இருக்கிறது. நீங்கள் நடித்த பாத்திரத்தில் மட்டும் விஜய் நடித்து இருந்தால் இத்திரைப்படம் வெளிவந்த உடன் கண்டிப்பாக தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக வந்து இருப்பார்' என்றார். அதற்காக தான் சீமான், நீங்கள், விஜய் இணையும் பகலவன் படம் இருக்கிறதே!

lørdag den 12. marts 2011

பொன்னின் செல்வன் நாயகி அனுஷ்கா


மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் நாயகியாக அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


விஜய்யின் ஜோடியாக, குந்தவை வேடத்தில் நடிப்பவர் இவரே.

இந்தப் படத்தில் அனுஷ்காவுக்கு இணையாக மேலும் சில நாயகிகளும் நடிக்க உள்ளனர். அதற்கான தேர்வு நடந்து வருகிறது.

மகேஷ்பாபு, ஆர்யா மற்றும் முன்னணி நடிகர்கள் இணையும் பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய பிரபல நாவலைத் தழுவி எடுக்கப்படுகிறது.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவனும், கலை இயக்குநராக சாபு சிரிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.