søndag den 3. juli 2011

லடாக்கில் வேலாயுதம்


விஜய் படங்களில் அதிக எதிர்பார்ப்புடன் தயாராகும் படம் என்றால் அது வேலாயுதம்தான். ஜெயம் ராஜா இயக்கம், ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயா‌ரிப்பு, இரண்டு ஹீரோயின்கள்...

கதையுடன் கமர்ஷியல் ச‌ரிவிகிதத்தில் கலந்திருப்பதாக பூ‌ரித்து‌ப் பேசுகிறார்கள். இதல் ராபின்ஹுட்டாக பல அதிரடி வேலைகள் செய்கிறாராம் விஜய். அத்துடன் விஜய் ஆண்டனியின் பாடல்களையும் சிலாகித் பேசுகின்றனர்.

லடாக்கில் சில காட்சிகளை எடுப்பதற்காக வேலாயுதம் யூனிட் லடாக்கில் முகாமிட உள்ளது. படப்பிடிப்பு முடியாவிட்டாலும் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதால் படம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிராமத்திலிருந்து சென்னை வரும் விஜய்க்கு நிதி நிறுவனம் செய்யும் மோசடி பெரும் ஏமாற்றத்தை‌த் தருகிறது. அதன்பிறகு அவர் எடுக்கும் முடிவுதான் வேலாயுதத்தின் மையம் என்கிறார்கள்.