
தமிழ் திரையுலகில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துள்ள நண்பன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று(23.12.2011) பிரமாண்டமாக நடந்துள்ளது.
தமிழ் திரையுலகில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் நண்பன் இசைவெளியீட்டு விழா தமிழ்நாட்டின் மான்செஸ்டரான கோயம்புத்தூரில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் நண்பன் திரைப்படத்தின் நாயகர்களான இளைய தளபதி விஜய், ஜீவா,ஸ்ரீகாந்த் ஆகியோரும் எஸ்.ஜே.சூர்யா, விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், சத்யராஜ், இளைய திலகம் பிரபு, சத்யன், அனுயா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நண்பன் இசைவெளியீட்டு விழாவில் ரசிகர்களின் மகிழ்ச்சி மிகவும் அதிகமாகவே காணப்பட்டது. விஜய் பேசும் போதெல்லாம் ரசிகர்கள் சப்தம் போட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
இளைய தளபதி விஜய், நான் சென்னையில் பிறந்தாலும், எனக்கு கோயம்புத்தூர் பாணியில் தமிழ் நன்றாக பேசுவேன். ஸ்ரீகாந்த் நன்றாக நடித்தார். ஷங்கர் சாரை இந்தியாவோட ஸ்பீல்பெர்க்ன்னு சொல்லலாம். அண்ணன் ஜீவா எங்களுடன் நன்றாக நடித்தார். படப்பிடிப்பிற்காக வசனம் பார்த்துக்கொண்டிருக்கும் போது எதையாவது சொல்லி சிரிக்க வைப்பார் என்று பேசினார்.
ஜீவா பேசும் போது, விஜய் சார் எவ்வளவு சாதனைகள் செய்திருந்தாலும், ரொம்ப எளிமையாக இருப்பார். ஷங்கர் சார் படப்பிடிப்பில் கோபப்படாமல், அமைதியான முறையில் நடந்துகொள்வார். நண்பன் படப்பிடிப்பு மிகவும் நன்றாக இருந்தது என்று பேசினார்.
இயக்குனர் ஷங்கர் பேசும் போது எந்திரன் படப்பிடிப்பு, ஒருநாள் எதார்த்தமாக தாமதம் ஆனபொழுது 3 இடியட்ஸ் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பின்பு இதற்கான வாய்ப்பு வரும்போது ஒத்துக்கொண்டேன்.
விஜய், படப்பிடிப்புக்கு தாமதம் ஆகாமல் வருவார். நாளைக்கு நடக்க வேண்டிய வேலைகளை முன்கூட்டியே தயார் செய்து வருவார். சுப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு, விஜய் தான் படப்பிடிப்புக்கு சரியாக வருவது என்று புகழ்ந்தார்.
பின்பு இசை குறுந்தகடை எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட, இளைய திலகம் பிரபு பெற்றுக் கொண்டார்.