
எக்ஸ்பிரஸ் வேகத்தில் வேலை செய்கிறார் சித்திக். விஜய்யை வைத்து இயக்கும் பாடிகார்ட் படத்தின் தமிழ் ரீமேக்கிற்காகதான் இந்த எக்ஸ்ட்ரா வேகம்.
விஜய் ஜோடி அசின், இசை வித்யாசாகர், மூன்று பாடல்கள் யுகபாரதி, பா.விஜய், விவேகா இருவருக்கும் தலா ஒரு பாடல், அசின் தந்தையாக ராஜ்கிரண், காமெடிக்கு வடிவேலு, எம்.எஸ்.பாஸ்கர், ஒளிப்பதிவு ஏகாம்பரம்... ஏறக்குறைய படத்தின் எல்லா அம்சங்களும் முடிவாகிவிட்டது. விஜய்யின் மாஸ் இமேஜுக்கு ஏற்றபடி காட்சிகளும் மாற்றப்பட்டுவிட்டன.
அனைத்தும் தயாரான நிலையில் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். அனேகமாக ஏப்ரல் 1ஆம் தேதியே பட வேலைகள் தொடங்கப்படலாம் என்கிறார்கள்.
விஜய், சிம்ரன் நடித்த ப்ரியமானவளே படத்தை தயாரித்தவர்கள் இந்த ரீமேக்கை தயாரிக்கின்றனர்.
Ingen kommentarer:
Send en kommentar