
காவலன் படம் தீபாவளிக்கு திரைக்கு வரவில்லை என்பது விஜய் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனால் அவர்கள் அடுத்தடுத்த திருவிழாக்களை கொண்டாட விஜய்யின் படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.
சில காரணங்களால் காவலன் படம் டிசம்பர் மாதமே திரைக்கு வருகிறது என்று சொல்லியிருக்கிறார் படத்தை இயக்கியிருக்கும் சித்திக். அதேநேரம் விஜய்யின் அடுத்தப் படமான வேலாயுதம் திட்டமிட்டபடி திரைக்கு வருகிறது. ஜெயம் ராஜா இயக்கும் இந்தப் படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி என இரு ஹீரோயின்கள்.
தற்போது படப்பிடிப்பில் இருக்கும் இப்படம் திட்டமிட்டபடி கோடை விடுமுறைக்கு வெளியாகும் என பட யூனிட் தெரிவித்துள்ளது.
Ingen kommentarer:
Send en kommentar