
ஷங்கர் இயக்க்கும் 3 இடியட்ஸ் ரீமேக்கான நண்பன் படத்தில் ஏற்கெனவே இளையதளபதி விஜய், ஜீவா, எஸ் ஜே சூர்யா, ஸ்ரீகாந்த் என நான்கு ஹீரோக்கள் நடிக்கிறார்கள். இப்போது ஐந்தாவதாக ராகவா லாரன்ஸும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். படத்தில் அஸ்தி கரைக்கும் ஒரு பாத்திரத்தில் அவர் வருகிறாராம். இந்த வேடத்தில் நடி...க்க முதலில் நடிகர் பிரசன்னாவைத்தான் கேட்டிருந்தார்களாம். தேதிகள் இல்லாத காரணத்தால் அவருக்குப் பதில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். அத்துடன் சத்யராஜ் கல்லூரி முதல்வர் வேடத்தில் நடிக்கிறார். பாய்ஸ் படத்திற்க்கு பின்னர் துடிப்பான இளைஞர் பட்டாளத்துடன் பணியாற்றுவதால் படுகுஷியாக இருக்கிறார் ஷங்கர். இலியானா, அனுயா நாயகிகளாக நடிக்கும் இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் ஊட்டியில் முடிந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது. அதில் விஜய் கலந்துகொள்கிறார்
Ingen kommentarer:
Send en kommentar