onsdag den 27. april 2011

வேலாயுதம் ஹைலைட்: விஜய், ஹன்சிகா முத்தக்காட்சி


வேலாயுதம் படத்தில் எத்தனையோ ஹைலைட்டான விடயங்கள் இருக்க அதில் ஹன்சிகா மோத்வானி, விஜய்க்கு கொடுத்துள்ள ஒரு சின்ன முத்தக் காட்சி கொலிவுட்டை கலக்க ஆரம்பித்துள்ளது.
இப்படத்தில் விஜய்க்கு இரண்டு நாயகிகள், ரூ. 2 கோடி செலவில் ஒரு பாடல் காட்சி, பிரமாண்டமான சண்டைக் காட்சி, ஓட்டப் பந்தயக் காட்சி என ஏகப்பட்ட ஹைலைட்ஸ்கள் உள்ளன வேலாயுதத்தில்.


அதே சமயம், அதை விட சூப்பர் ஹிட்டாக பேசப்படுவது ஹன்சிகா கொடுத்துள்ள முத்தம் தான். இப்படத்தில் விஜய்க்கு படு சூடான முத்தம் கொடுத்துள்ளாராம் ஹன்சிகா. அதாவது விஜய்யின் உதடுகளுக்கு வெகு நெருக்கமாக வந்து முத்தமிடுவது போல இந்தக் காட்சி இருக்கிறதாம். இது ரசிகர்களை வெகுவாக கிளுகிளுப்பூட்டும் என்கிறார்கள் யூனிட்டில்.

இதுவரை இல்லாத அதிரடிப் படமாக வேலாயுதம் உருவாகிறது என்று கொலிவுட்டில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள். இப்படத்தில் இன்னொரு ஹைலைட் என்னவென்றால் இப்படத்தின் வில்லன்கள். கிட்டத்தட்ட 15 வில்லன்கள் இப்படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் பால்காரர் வேடத்தில் நடிக்கிறார் விஜய். சரண்யா மோகன் அவரது தங்கையாக வருகிறார்.

படத்தில் கொமெடி பட்டையைக் கிளப்பும் வகையில் அமைந்துள்ளதாம். சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, பாண்டியராஜன், ராகவ் ஆகியோர் கொமெடிக்குக் கை கோர்த்துள்ளனர். வழக்கமான வடிவேலு படத்தில் இல்லாத குறையை இவர்கள் நிவர்த்தி செய்து விடுவார்கள் என்கிறார்கள். படத்தின் பெரும்பாலான பகுதிகளை முடித்துவிட்டனர். இறுதிக்காட்சி மட்டுமே பாக்கி உள்ளதாம்.

lørdag den 23. april 2011

பரபர ஷூட்டிங்... ரிலீசுக்கு தயாராகும் வேலாயுதம்


விஜய்யின் அடுத்த படமான வேலாயுதம் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துவிட்டது. அதே நேரம் படத்தின் விளம்பரப் பணிகளையும் படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஆரம்பித்துள்ளார். விஜய்யின் பிறந்த நாளன்று இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் ரவிச்சந்திரன்.


விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஜெனிலியா மற்றும் ஹன்ஸிகா நடித்துள்ளனர். பாண்டியராஜன், சரண்யா மோகன், சந்தானமும் படத்தில் உண்டு. ஜெயம் ராஜா இயக்கியுள்ளார்.

இந்தப் படம் தொடர்பாக ஆஸ்கர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்தப் படத்தில் பால்காரராக நடித்துள்ளார் விஜய். ஜெனிலியா பெண் பத்திரிகை நிருபராகவும், ஹன்ஸிகா விஜய்யின் காதலியாகவும் நடித்துள்ளனர். 5 பாடல்கள், 6 அதிரடி சண்டைகள் இடம்பெற்றுள்ளன. விஜய்யின் பிறந்த நாளன்று இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்,"என்று கூறியுள்ளார்.

விஜய் பிறந்த நாள் ஜூன் 22 ம் தேதி ஆகும்.

velayutham stills...





விஜய் படத்துக்கு கட் சொல்ல மறந்த டைரக்டர்


ஓஸ்கர் தயாரிப்பில் விஜய் நடிப்பில் 'வேலாயுதம்' படம், எம்.ராஜா இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது.
விஜய், ஜெனிலியா, ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ளனர். வில்லன்களின் பெயர்களை மட்டும் மறைத்து வைத்துள்ளார்களாம்.
இளைஞன் ஒருவன் தலைவனாக உயர்கிறான் என்பதை சொல்கிறது வேலாயுதம் படம்.

கிராமமும் நகரமுமாக மாறி, மாறிப்பயணம் செய்கிற கதை. இது முக்கோண காதல் கதை.

அண்ணன், தங்கை பாசத்தை அழகாகவும் புது விதமாகவும் சொல்லும் படம் இது.

இது ஒரு ஆக்ஸன் படம் மட்டுமல்ல. நாயகன், நாயகியர்கள் அழகான நடிப்பை வெளிப்படுத்தும் படம்.

நல்லதொரு கதை சொல்லும் படமாகவும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படமாகவும் இருக்கும்.

கிராமத்து இளைஞனாக, பால்காரனாக கதாநாயகன் விஜய் நடித்துள்ளார். ஊரின் சுவாசத்துக்கு காற்றாக நாயகன் விஜய் வலம் வருகிறார்.

காதல், பாசம் உள்ள ஆவேச இளைஞனாக சில இடங்களில் உணர்ச்சி வசப்பட்டு நடித்துள்ளார். நாயகி ஜெனிலியா 'பத்திரிக்கை நிருபராக' வருகிறார்.

இன்னொரு நாயகி ஹன்சிகா பொதுத்துறையில் உள்ள பெண்ணாக நடித்துள்ளார். விஜய் நடிப்பில் வளர்ந்து வரும் வேலாயுதம் படத்தை இயக்கும் போது,சில இடங்களில் 'கட்' சொல்ல மறந்துள்ளேன் என்று வேலாயுதம் பட இயக்குனர் எம்.ராஜா கூறியுள்ளாராம்.

lørdag den 9. april 2011