fredag den 5. juni 2009

ஆஸ்கர் பிலிம்ஸில் விஜய்


ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் முதல் முறையாக நடிக்கிறார் விஜய். இது அவரது 51வது படமாக இருக்கும். அந்நியன், தசாவதாரம் போன்ற மெகா பட்ஜெட் படங்களைத் தயாரித்த நிறுவனம் ஆஸ்கர் பிலிம்ஸ். விரைவில் ஜாக்கிசான் நடிக்கும் படத்தையும் இந்நிறுவனம் தயாரிக்க உள்ளது. மாஸ்கோவின் காவிரி, லீலை படங்களை தற்போது தயாரித்துவரும் ஆஸ்கர் பிலிம்ஸ், முதல் முறையாக விஜய் படத்தை தயாரிக்கிறது. விஜய்யின் வேட்டைக்காரன் அவரது 49வது படம். ஐம்பதாவது படத்தை சங்கிலி முருகன் தயாரிக்கிறார். ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பது 51வது படமாக இருக்கும். இந்தப் படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார். இவர் விஜய்க்காக எழுதிய ஸ்கிரிப்ட் விஜய்யால் ஏற்கனவே ஓ.கே. சொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Ingen kommentarer:

Send en kommentar