torsdag den 13. august 2009
"அசல்" கெட்டப்பில் விஜய்
விருமாண்டி கமல் கெட்டப்பில்தான் அஜித் தனது 'அசலில்' கிருதாவும், மீசையும் இணைத்து, ஃபோட்டோ செஷனில் பரபரப்பை ஏற்படுத்தினார்.இப்போது இந்த கெட்டப்பிலேயே விஜய்யும் தனது படமான வேட்டைக்காரனில் ஒரு பாடலுக்குத் தூள்பரத்தும் நடனமாடியிருக்கிறார். பாபு சிவன் இயக்கும் வேட்டைக்காரனின் பாடல் காட்சி அண்மையில் ஏவி.எம். ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டுள்ளது. அசல் கெட்டப்பில் விஜய் தனது ஜோடி அனுஷ்காவுடன் ஆட்டம் போட்டுள்ள இந்தப் பாடல்தான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் டாக். நடன இயக்குனர் பாபு பாஸ்கரின் டிபிக்கலான மூவ்மெண்டுகளை அனயாசமாக ஆடிக்காட்டி அசத்தியிருக்கிறார் விஜய். ரிங்டோனாகவும், டயலர் டோனாகவும் ரசிகர்களின் காதுகளில் ஒலிக்கப் போகும் அந்தப் பாடல் பெரிய அளவில் ஒரு கலக்கு கலக்க வேண்டும் என உத்தேசித்து ஒவ்வொரு அசைவுகளையும் தேர்ந்தெடுத்து தந்துள்ளார் நடன இயக்குனர் பாபு பாஸ்கர்.
lørdag den 1. august 2009
ஏவிஎம்-ல் தீ : வேட்டைக்காரன் படப்பிடிப்பு ரத்து
இன்று அதிகாலை சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 7வது தளத்தில் போடப்பட்டிருந்த வேட்டைக்காரன் அரங்கு சேதமடைந்தது.சில நாட்களாக வேட்டைக்காரன் படத்தின் படப்பிடிப்பு சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்து வந்தது. இதற்காக 7வது தளத்தில் 25 லட்ச ரூபாயில் பிரமாண்ட செட் போடப்பட்டிருந்தது. நேற்று நடந்த படப்பிடிப்பில் விஜய், அனுஷ்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்தப் படப்பிடிப்பு நடந்ததற்கு அருகில் 6வது தளத்தில் விஜய் டிவி நிகழ்ச்சிக்காக பிரமாண்ட செட் போடப்பட்டிருந்தது. இரண்டு தளத்திலும் நேற்று மாலை வரை படப்பிடிப்பு நடந்தது.இன்று அதிகாலை 2.30 மணி அளவில் 6வது தளத்தில் தீப்பிடித்தது. இந்த தீ மெள்ள 7வது தளத்திற்கும் பரவியது. அதன் பிறகே வாட்ச்மேன்கள் தீயை கவனித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த விபத்தால் 6வது தளத்தில் போடப்பட்டிருந்த விஜய் டிவி நிகழ்ச்சிக்கான செட் முற்றிலும் சேதமடைந்தது. வேட்டைக்காரன் செட்டின் ஒரு பகுதியும் தீயில் சேதமடைந்தது.இந்த விபத்தால் வேட்டைக்காரன் படப்பிடிப்பு இன்று ரத்து செய்யப்பட்டது
Abonner på:
Opslag (Atom)