lørdag den 1. august 2009
ஏவிஎம்-ல் தீ : வேட்டைக்காரன் படப்பிடிப்பு ரத்து
இன்று அதிகாலை சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 7வது தளத்தில் போடப்பட்டிருந்த வேட்டைக்காரன் அரங்கு சேதமடைந்தது.சில நாட்களாக வேட்டைக்காரன் படத்தின் படப்பிடிப்பு சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்து வந்தது. இதற்காக 7வது தளத்தில் 25 லட்ச ரூபாயில் பிரமாண்ட செட் போடப்பட்டிருந்தது. நேற்று நடந்த படப்பிடிப்பில் விஜய், அனுஷ்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்தப் படப்பிடிப்பு நடந்ததற்கு அருகில் 6வது தளத்தில் விஜய் டிவி நிகழ்ச்சிக்காக பிரமாண்ட செட் போடப்பட்டிருந்தது. இரண்டு தளத்திலும் நேற்று மாலை வரை படப்பிடிப்பு நடந்தது.இன்று அதிகாலை 2.30 மணி அளவில் 6வது தளத்தில் தீப்பிடித்தது. இந்த தீ மெள்ள 7வது தளத்திற்கும் பரவியது. அதன் பிறகே வாட்ச்மேன்கள் தீயை கவனித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த விபத்தால் 6வது தளத்தில் போடப்பட்டிருந்த விஜய் டிவி நிகழ்ச்சிக்கான செட் முற்றிலும் சேதமடைந்தது. வேட்டைக்காரன் செட்டின் ஒரு பகுதியும் தீயில் சேதமடைந்தது.இந்த விபத்தால் வேட்டைக்காரன் படப்பிடிப்பு இன்று ரத்து செய்யப்பட்டது
Abonner på:
Kommentarer til indlægget (Atom)
Ingen kommentarer:
Send en kommentar