தனது 50-வது படத்தில் மீனவர் வேடம் போடுகிறார்விஜய் இந்தப் படத்துக்கு சுறா என்று பெயர் வைக்க யோசித்து வருகிறாராம்.ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கு உரிமைக்குரல் என்ற தலைப்பைப் பதிவு செய்து வைத்திருந்தார் தயாரிப்பாளர் சங்கிலி முருகன். ஆனால் கதைப்படி, நாயகன் பெயரான சுறா என்பதையே இந்தப் படத்துக்கு சூட்ட முடிவு செய்துள்ளார்களாம்.
விஜய் ஜோடியாக தமன்னா நடிக்கும் இந்தப் படத்தில் வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மணிசர்மா இசையமைக்கிறார். வரும் 18-ம் தேதி முதல் முழுவீச்சில் படப்பிடிப்பு துவங்குகிறது. எஸ்பி ராஜ்குமார் இயக்கும் இந்தப் படத்தை ஒரே ஷெட்யூலாக முடித்துவிடத் திட்டமிட்டுள்ளார் விஜய் . ஏப்ரல் 14 அன்று சித்திரை ஸ்பெஷலாக வருகிறது சுறா. விஜய்யின் அடுத்த படமான வேட்டைக்காரன் தீபாவளிக்கு வெளியாகிறது.
Ingen kommentarer:
Send en kommentar