torsdag den 29. oktober 2009
onsdag den 21. oktober 2009
மீண்டும் காதலுக்கு மரியாதை கூட்டணி?
இதுதான் இப்போது லேட்டஸ்ட் பரபரப்பு. விஜய்க்கு தொலைபேசியிலேயே கதை சொல்லியிருக்கிறாராம் இயக்குனர் பாசில். இந்த காதலுக்கு மரியாதை கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக பலமாகவே கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
விஜய் தனது ஐம்பதாவது படமான சுறாவில் தற்போது பிஸியாக இருக்கிறார். இதையடுத்து ஜெயம் ராஜா இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த புராஜெக்ட் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த சின்ன கேப்பில் சிக்சர் அடிக்க பலரும் முயற்சி செய்கிறார்கள்.
லிங்குசாமி விஜய்க்காக ஒரு கதை தயார் செய்து வைத்துள்ளாராம். விஜய் ஓகே சொன்னால் படப்பிடிப்பை தொடங்க - பையாவுக்கு பிறகுதான் - அவர் தயார். ஏற்கனவே பாடிகாட் படத்தின் கதையை விஜய்யிடம் கூறியிருக்கிறார் இயக்குனர் சித்தார்த்.இந்நிலையில் பாசிலும் விஜய்யிடம் கதை கூறியிருக்கிறார். விஜய்யின் சினிமா கேரியரில் திருப்புமுனையாக அமைந்த படம், பாசிலின் காதலுக்கு மரியாதை. அதனால் கதையை கேட்ட விஜய் சீரியஸாக அதுபற்றி யோசனை செய்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.காதலுக்கு மரியாதை கூட்டணி மீண்டும் இணையுமா? விஜய்தான் பதில் சொல்ல வேண்டும்.
fredag den 16. oktober 2009
torsdag den 15. oktober 2009
விஜய் கட்டப்போகும் பள்ளிக்கூடம்
நடிகர் விஜய் ஓசையுடனும் ஓசை இல்லாமலும் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். கட்சி ஆரம்பிக்கப் போகிறார்...
அப்படி இப்படி என்று இவரைப் பற்றி அடிக்கடி செய்திகள் கசிந்தவண்ணம் இருந்தாலும் மற்றவர்களுக்கு உதவி செய்வதை மட்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறாராம். இப்போது இவர் ஏழைகளும் பயன்பெறும் விதத்தில் சென்னையை அடுத்த வேளச்சேரியில் பள்ளிக்கூடம் ஒன்று கட்டும் எண்ணத்தில் இருக்கிறாராம். இந்தப் பள்ளிக்கூடம் கம்ப்யூட்டர் வசதிகளைக் கொண்டு முன்னணி பள்ளிக்கூடங்களுக்கு இணையானதாக இருக்குமாம். இந்தப் பள்ளிக்கு மக்கள் நல்ல ஆதரவைத் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் விஜய். நல்ல விஷயங்களுக்கு எப்பவுமே நம்ம மக்கள் ஆதரவு தருவார்கள்.
onsdag den 7. oktober 2009
tirsdag den 6. oktober 2009
søndag den 4. oktober 2009
lørdag den 3. oktober 2009
Abonner på:
Opslag (Atom)