onsdag den 21. oktober 2009

மீண்டும் காதலுக்கு ம‌ரியாதை கூட்டணி?


இதுதான் இப்போது லேட்டஸ்ட் பரபரப்பு. விஜய்க்கு தொலைபேசியிலேயே கதை சொல்லியிருக்கிறாராம் இயக்குனர் பாசில். இந்த காதலுக்கு ம‌ரியாதை கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக பலமாகவே கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
விஜய் தனது ஐம்பதாவது படமான சுறாவில் தற்போது பிஸியாக இருக்கிறார். இதையடுத்து ஜெயம் ராஜா இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த புராஜெக்ட் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த சின்ன கேப்பில் சிக்சர் அடிக்க பலரும் முயற்சி செய்கிறார்கள்.
லிங்குசாமி விஜய்க்காக ஒரு கதை தயார் செய்து வைத்துள்ளாராம். விஜய் ஓகே சொன்னால் படப்பிடிப்பை தொடங்க - பையாவுக்கு பிறகுதான் - அவர் தயார். ஏற்கனவே பாடிகாட் படத்தின் கதையை விஜய்யிடம் கூறியிருக்கிறார் இயக்குனர் சித்தார்த்.இந்நிலையில் பாசிலும் விஜய்யிடம் கதை கூறியிருக்கிறார். விஜய்யின் சினிமா கே‌ரிய‌ரில் திருப்புமுனையாக அமைந்த படம், பாசிலின் காதலுக்கு ம‌ரியாதை. அதனால் கதையை கேட்ட விஜய் சீ‌ரியஸாக அதுபற்றி யோசனை செய்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.காதலுக்கு ம‌ரியாதை கூட்டணி மீண்டும் இணையுமா? விஜய்தான் பதில் சொல்ல வேண்டும்.

Ingen kommentarer:

Send en kommentar