சுறா விஜய்யின் ஐம்பதாவது படம். சகல விதத்திலும் படம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அனைவரும் கடுமையாக உழைத்து வருகின்றனர். ஹைதராபாத்தில் நடக்கும்; படப்பிடிப்பைத் தொடர்ந்து டிசம்பரில் கேரளா செல்கிறது மொத்த யூனிட்டும்.
எஸ்.பி.ராஜகுமார் படத்தை இயக்குகிறார். ஆக்சன் காட்சிகளுக்கு சமமாக காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். முக்கியமாக விஜய், வடிவேலு வரும் காட்சிகள் வயிற்றை பதம்பார்க்கும். 2010 தொடக்கத்திலேயே படம் தயாரானாலும் ஜுன் 22 ஆம் தேதி படத்தை வெளியிட தீர்மானித்திருக்கிறார் தயாரிப்பாளர் சங்கிலி முருகன். அன்றுதான் விஜய்யின் பிறந்தநாள். விஜய் படம் வெளியாக அதைவிட சிறந்த நாள் இருக்க முடியாது.
Ingen kommentarer:
Send en kommentar