torsdag den 24. december 2009

வேட்டைக்காரன் மெகா ஹிட் : விஜய் சந்தோஷத்தில்


சன் பிக்ஸர்ஸ் சார்பில் வெளியான வேட்டைக்காரன் படம் மிகப் பெரிய, வர்ணிக்க முடியாத அளவு, மெகா வெற்றிப் படமாக அமைந்துள்ளதாகவும், இப்படி ஒரு வெற்றிப் படம் தந்ததற்காக ஏவிஎம் பாலசுப்பிரமணியத்துக்கும், கலாநிதி மாறனுக்கும் நன்றி என்று விஜய் கூறினார்.
வேட்டைக்காரன் திரைப்படம் வெள்ளிக் கிழமை வெளியானது. விமர்சகர்கள் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆனால் இது பெரும் வெற்றிப் படம் என்று தயாரிப்பாளர், வெளியீட்டாளரான சன் பிக்ஸர்ஸ் மற்றும் நடிகர் விஜய் தரப்பில் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில், இன்று சன் பிக்ஸர்ஸ் அதிபர் கலாநிதி மாறன் வீட்டுக்கு நடிகர் விஜய்யும் அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகரனும் விசிட் அடித்தனர். கலாநிதி மாறனுக்கு பூங்கொத்து கொடுத்து, "இப்படியொரு பிரமாண்ட வெற்றிப் படம் அமையக் காரணமாக இருந்ததற்கு நன்றி" என்று கூறினார் விஜய்.

பின்னர் அளித்த பேட்டியில், "வேட்டைக்காரன் படம் மிகப் பெரிய மெகா வெற்றிப்படமாக அமைந்துள்ளது. என்னுடைய சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் என் மகனின் ஆசையை நிறைவேற்றி விட்டேன். இனி அவர் தனது படிப்பை கவனிக்க வேண்டும். நடிப்பு அப்புறம்தான்.

இந்த சந்தோஷமான நேரத்தில், படத்தின் தயாரிப்பாளர் ஏவிஎம் பாலசுப்பிரமணியத்துக்கும், சன் டிவிக்கும், கலாநிதி மாறனுக்கும் மீண்டும் நன்றி சொல்கிறேன்" என்றார்.

சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் கோபம்


கோபம் இது தான் சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் புதிய படத்திற்கான நாமகரணம். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாக இருக்கும் இப்படம் விக்ரம் நடித்த கந்தசாமி படத்திற்கு 100வது நாள் விழா கொண்டாடி முடித்த கையோடு இப்படத்தை தொடங்கும் முயற்சிகளில் இறங்கிவிட்டார் தாணு. விஜய்யும் சீமானும் நாயகி வேட்டையில் இறங்கிவிட்டனர் இப்பொழுதே

onsdag den 9. december 2009

mandag den 7. december 2009

விஜய்யின் வேட்டைக்காரன் சாதனை


விஜய் நடித்துள்ள வேட்டைக்காரன் படத்தின் கேரள மற்றும் கர்நாடக உரிமைகளை மிகப் பெரிய தொகைக்கு விற்று சாதனைப் படைத்துள்ளனர் அதன் உரிமையாளர்களான சன் பிக்ஸர்ஸ்.
இந்தப் படத்துக்கு தரப்பட்ட விலை எவ்வளவு என்பதை வெளிப்படையாக கூறவில்லை. ஆனால் ரஜினி படத்துக்குப் பிறகு இந்த மாநிலங்களில் இத்தனை பெரிய தொகை விற்கப்பட்ட ஒரே படம் வேட்டைக்காரன்தான் என்பது மட்டும் உறுதி என்றனர் வேட்டைக்காரன் யூனிட்டார்.
கேரளாவில் மட்டும் 75 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. இதற்கு முன் அதிக திரையரங்குகளில் வெளியான படம் சிவாஜி மட்டுமே. 120 திரையரங்குகளில் சிவாஜி வெளியானது. அதற்கு அடுத்து வேட்டைக்காரன்தானாம். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கேரளாவில் மம்முட்டி மற்றும் மோகன்லாலின் படங்கள் வெளியாகும் நிலையில், அந்தப் படங்களுடன் போட்டிபோட்டு 75 திரையரங்குகளில் விஜய் யின் படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் போக்கிரி கேரளாவில் 100 நாட்களைத் தாண்டி ஓடியது நினைவிருக்கலாம்.

søndag den 6. december 2009

விஜய்யின் 51வது படத்தின் பெயர் தளபதி


சுறா படத்தில் நடித்து வரும் விஜய் அப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளார்.ஏற்கனவே இளைய தளபதி என விஜய் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜய் அடுத்து நடிக்க உள்ள 51வது படம் தளபதி. தளபதி படம் 1991ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. அப்படத்தின் தலைப்பே விஜய் படத்துக்கு சூட்டப்பட்டுள்ளது. விஜய்யின் தளபதி, முந்தைய தளபதி படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாம். இப்படம் குடும்ப பாங்கான கதை. விஜய்க்கு ஜோடியாக நடிக்க அசினிடம் பேசி உள்ளனர். இப்படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார்.

vettai new pap add 2




fredag den 4. december 2009