விஜய் நடித்துள்ள வேட்டைக்காரன் படத்தின் கேரள மற்றும் கர்நாடக உரிமைகளை மிகப் பெரிய தொகைக்கு விற்று சாதனைப் படைத்துள்ளனர் அதன் உரிமையாளர்களான சன் பிக்ஸர்ஸ்.
இந்தப் படத்துக்கு தரப்பட்ட விலை எவ்வளவு என்பதை வெளிப்படையாக கூறவில்லை. ஆனால் ரஜினி படத்துக்குப் பிறகு இந்த மாநிலங்களில் இத்தனை பெரிய தொகை விற்கப்பட்ட ஒரே படம் வேட்டைக்காரன்தான் என்பது மட்டும் உறுதி என்றனர் வேட்டைக்காரன் யூனிட்டார்.
கேரளாவில் மட்டும் 75 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. இதற்கு முன் அதிக திரையரங்குகளில் வெளியான படம் சிவாஜி மட்டுமே. 120 திரையரங்குகளில் சிவாஜி வெளியானது. அதற்கு அடுத்து வேட்டைக்காரன்தானாம். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கேரளாவில் மம்முட்டி மற்றும் மோகன்லாலின் படங்கள் வெளியாகும் நிலையில், அந்தப் படங்களுடன் போட்டிபோட்டு 75 திரையரங்குகளில் விஜய் யின் படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் போக்கிரி கேரளாவில் 100 நாட்களைத் தாண்டி ஓடியது நினைவிருக்கலாம்.
Ingen kommentarer:
Send en kommentar