fredag den 29. oktober 2010

mandag den 18. oktober 2010

சூப்பர் குட்ஸூடன் பட்டய கிளப்ப தயாராகும் விஜய்!


இளைய தளபதி விஜய் தற்போது நிறைய படங்களில் ஒப்பந்தமாகி பரபரப்பாக நடித்து வருகிறார். அவர் விரைவில் இயக்குநர் பாலா டீமில் இணையவுள்ளார் என்பதுதான் தற்போது கசிந்திருக்கும் விஷேச செய்தி.
தற்போது விஜய் நடித்துவரும் காவலன் டிசம்பர் 24-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. அடுத்து வேலாயுதம், 3 இடியட்ஸ் தமிழ் ரீமேக், பகலவன், ஏ.எம்.ரத்னத்திற்காக விக்ரம் கே.குமார் இயக்கும் படம், களவாணி சற்குணம் இயக்கும் படம் என பிஸியாக இருக்கிறார் விஜய்.

இந்நிலையில் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் விஜய். இந்த படத்தை இயக்கப் போவது இயக்குநர் பாலாவின் பட்டறையிலிருந்து வரும் புதுமுக இயக்குநர். இவர் சொன்ன கதை விஜய்யை மிகவும் கவர்ந்து விட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சூப்பர் குட் பிலிம்ஸ் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சூப்பர் குட் பிலிம்ஸ் பேனரில் விஜய் நடித்து வெளிவந்த பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், லவ் டுடே, திருப்பாச்சி போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

fredag den 15. oktober 2010

விஜய்யால் உயிர் பிழைத்த சிறுவன்


நடிகர் விஜய் நேரத்தில் செய்த உதவியால், மரணத்தின் விளிம்பிலிருந்த சிறுவன் காப்பாற்றப்பட்டான்.

ஆந்திராவைச் சேர்ந்த சிறுவன் யஷ்வந்த். அவனுக்கு சிறு வயதிலேயே ரத்த அழுத்தம் இருந்தது. வாந்தி, தலைவலியால் அவதிப்பட்டான். மூக்கில் இருந்தும் அடிக்கடி ரத்தம் வழிந்தது.

ஆந்திராவில் நிறைய மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தும் டாக்டர்கள் காப்பாற்ற முடியாது என கை விரித்தனர். அறுவைச் சிகிச்சை செய்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.

நடிகர் லாரன்ஸ் சென்னையில் அறக்கட்டளை வைத்து குழந்தைகளுக்கு மருத்துவ வசதி அளிப்பதை கேள்விப்பட்டு அவரை அணுகினர். லாரன்ஸ் அச்சிறுவனை விஜய்யிடம் அழைத்து சென்றார்.

சிறுவனைப் பார்த்த விஜய் எவ்வளவு செலவானாலும் நான் பார்த்து கொள்கிறேன். சிறுவனை காப்பாற்றுங்கள் என்றார்.

மலர் மருத்துவமனையில் அச்சிறுவன் சேர்க்கப்பட்டான். அவனைச் சோதித்த டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், சிறுவனின் இதயத்திலிருந்து கிட்னிக்கு செல்லும் வால்வில் கோளாறு உள்ளதென்றும் ஆபரேஷன் செய்தால் பல லட்சங்கள் செலவாகும் என்றும் கூறினார்.

மொத்த செலவையும் விஜய்யே ஏற்றதால் சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சைத் தொடங்கப்பட்டது. பெரிய அறுவைச் சிகிச்சை மூலம் சிறுவனைப் பிழைக்க வைத்துவிட்டனர் மருத்துவர்கள்.

மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்ததும், விஜய்க்கு நன்றி சொல்லத் தேடினான் சிறுவன். காவலன் படப்பிடிப்பிலிருந்த விஜய்யைச் சந்தித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தான் யஷ்வந்த். அவன் பெற்றோரும் விஜய்யின் கையை பிடித்துக் கொண்டு அழுதனர்.

அவர்களை ஆறுதல்படுத்திய விஜய், பத்திரமாக ஊர் போய்ச் சேரும்படி கூறி அனுப்பி வைத்தார்.

காவலன் வெளிநாட்டு உரிமை ரூ 6 கோடிக்கு


அசின் நடித்துள்ள விஜய் படத்தைப் புறக்கணிப்போம் என்று தமிழ் உணர்வாளர்கள் ஒரு பக்கமும், சுறா நஷ்டத்தை ஈடு செய்யாத விஜய்க்கு காவலன் படத்தில் ஒத்துழைப்பு தரமாட்டோம் என திரையரங்க உரிமையாளர்களும் கொடிபிடித்துக் கொண்டிருக்க, காவலன் படத்தின் வெளிநாட்டு உரிமை மிக அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

தந்த்ரா பிக்சர்ஸ் இந்தப் படத்தை ரூ 6 கோடிக்கு வாங்கியுள்ளது. விஜய் படங்களிலேயே அதிக விலைக்கு ஓவர்ஸீஸ் ரைட்ஸ் விற்கப்பட்டிருப்பது காவலனுக்குத்தான் என்கிறார்கள்.

மலையாளப் படமான பாடிகார்டின் ரீமேக்தான் இந்த காவலன். இந்தப்படத்தின் கேரள உரிமை ரூ 1.25 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. தமீன்ஸ் பிலிம்ஸ் வாங்கியுள்ளது.

தமிழகத்தில் இந்தப் படத்தை ரெட்ஜெயன்ட் வெளியிடும் என்று கூறப்படுகிறது

onsdag den 6. oktober 2010

விஜய், ‌ஜீவா, சித்தார்த் - 3 இடியட்ஸ்


எந்திரன் படத்தை முடித்து ரசிகர்களின் ஆரவார வரவேற்பையும் முழுமையாக அனுபவித்துவிட்டார் ஷங்கர். போட்ட பணம் திரும்ப கிடைக்குமா என்ற பயத்தை அப்பளமாக்கியிருக்கிறது பாக்ஸ் ஆஃபிஸில் ‌ரிசல்ட்.

இந்த மெகா திருப்தியுடன் தனது அடுத்தப் படத்தை தொடங்குகிறார் ஷங்கர். அடுத்தப் படம் இந்தியில் வெளியான 3 இடியட்ஸின் தமிழ் ‌‌ரீமேக்.

இந்த ‌‌ரீமேக்கில் விஜய், ‌‌ஜீவா, சித்தார்த் நடிக்கிறார்கள் என்பது இறுதியாக கிடைத்திருக்கும் தகவல். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இந்த ‌‌ரீமேக்கை ஷங்கர் இயக்குகிறார். தெலுங்கில் விஜய் நடிக்கும் வேடத்தை செய்பவர் மகேஷ்பாபு.

ஒரு படம் முடிந்ததும் குடும்பத்துடன் வெளிநாடு சென்று ‌ரிலாக்ஸ் செய்வது ஷங்க‌ரின் வழக்கம். இந்தமுறையும் வெளிநாடு செல்கிறார். ஓய்வு முடிந்து திரும்பியதும் 3 இடியட்ஸ் ‌‌ரீமேக் தொடங்கயிருக்கிறது.

tirsdag den 5. oktober 2010

வேலாயுதம் கோடை விடுமுறைக்கு


காவலன் படம் தீபாவளிக்கு திரைக்கு வரவில்லை என்பது விஜய் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனால் அவர்கள் அடுத்தடுத்த திருவிழாக்களை கொண்டாட விஜய்யின் படங்கள் வ‌ரிசைகட்டி நிற்கின்றன.

சில காரணங்களால் காவலன் படம் டிசம்பர் மாதமே திரைக்கு வருகிறது என்று சொல்லியிருக்கிறார் படத்தை இயக்கியிருக்கும் சித்திக். அதேநேரம் விஜய்யின் அடுத்தப் படமான வேலாயுதம் திட்டமிட்டபடி திரைக்கு வருகிறது. ஜெயம் ராஜா இயக்கும் இந்தப் படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயா‌ரிக்கிறார். ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி என இரு ஹீரோயின்கள்.

தற்போது படப்பிடிப்பில் இருக்கும் இப்படம் திட்டமிட்டபடி கோடை விடுமுறைக்கு வெளியாகும் என பட யூனிட் தெ‌ரிவித்துள்ளது.