onsdag den 6. oktober 2010
விஜய், ஜீவா, சித்தார்த் - 3 இடியட்ஸ்
எந்திரன் படத்தை முடித்து ரசிகர்களின் ஆரவார வரவேற்பையும் முழுமையாக அனுபவித்துவிட்டார் ஷங்கர். போட்ட பணம் திரும்ப கிடைக்குமா என்ற பயத்தை அப்பளமாக்கியிருக்கிறது பாக்ஸ் ஆஃபிஸில் ரிசல்ட்.
இந்த மெகா திருப்தியுடன் தனது அடுத்தப் படத்தை தொடங்குகிறார் ஷங்கர். அடுத்தப் படம் இந்தியில் வெளியான 3 இடியட்ஸின் தமிழ் ரீமேக்.
இந்த ரீமேக்கில் விஜய், ஜீவா, சித்தார்த் நடிக்கிறார்கள் என்பது இறுதியாக கிடைத்திருக்கும் தகவல். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இந்த ரீமேக்கை ஷங்கர் இயக்குகிறார். தெலுங்கில் விஜய் நடிக்கும் வேடத்தை செய்பவர் மகேஷ்பாபு.
ஒரு படம் முடிந்ததும் குடும்பத்துடன் வெளிநாடு சென்று ரிலாக்ஸ் செய்வது ஷங்கரின் வழக்கம். இந்தமுறையும் வெளிநாடு செல்கிறார். ஓய்வு முடிந்து திரும்பியதும் 3 இடியட்ஸ் ரீமேக் தொடங்கயிருக்கிறது.
Abonner på:
Kommentarer til indlægget (Atom)
Ingen kommentarer:
Send en kommentar