mandag den 10. januar 2011

அதிக தியட்டர்களை கைப்பற்றி காவலன் சாதனை!


மிகபெருமளவில் எதிர்பார்க்கப்படும் இளையதளபதி விஜயின் காவலன் திரைப்படம் வரும் வெள்ளிகிழமை வெளியாக இருக்கிறது. இவ் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பல எதிர்ப்புக்களையும் எதிர் நோக்கியுள்ளது. அண்மைகாலமாக காவலன் திரைப்படத்திற்கு வெறும் 70 தியட்டர்கள தான் கிடைத்துள்ளது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. இவ் வதந்திகளை தகர்த்தெறியும் முகமாக காவலன் பெருமளவான தியட்டர்களை தன்வசப்படுத்தியுள்ளது. அந்தவகையில் கேரளாவில் சுமார் 100 திரையரங்குகளை கைப்பற்றியது. ஒரு தமிழ் திரைப்படம் கேரளாவில் 100 திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறையாகும். அத்துடன் மும்பை மாநகரில் சுமார் 65 திரையரங்குகளை கைப்பற்றி அனைவரயும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மும்பையிலும் ஒரு தமிழ் திரைப்படம் இவ்வளவு பெருமளவான திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல் முறை.

மேலும் தமிழ்நாட்டில் 450 திரையரங்குகளை பிடித்துள்ளது.மேலும் திரையரங்குகளை பெற பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தற்போது திரைப்பட விநியோகர் சங்கம் விஜய் பக்கம் நின்று திரையரங்கு உரிமையாளர் பிரச்சனையை சமாளிக்கிறது.

Ingen kommentarer:

Send en kommentar