søndag den 20. februar 2011
fredag den 18. februar 2011
onsdag den 16. februar 2011
யுகே-யில் காவலன்
யுகே-யில் காவலன் குறிப்பிடத்தகுந்த வசூலைப் பெற்றிருக்கிறது. இந்த வருடம் வெளியான தமிழ்ப் படங்களில் காவலனுக்குதான் அதிக வசூல் என்பது விஜய் தரப்புக்கு சந்தோஷம் தரும் செய்தி.
2வது வார இறுதியில் காவலன் யுகே பாக்ஸ் ஆஃபிஸில் 29வது இடத்தைப் பிடித்திருந்தது. 3வது வார இறுதியில் 35வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 3வது வார இறுதியில் இதன் யுகே வசூல் 8,346 பவுண்ட்கள். ஒன்பது திரையிடல்களின் மூலம் இந்த வசூலை பெற்றிருக்கிறது.
இதுவரை காவலன் வசூலித்த மொத்த தொகை 1,19,998 பவுண்ட்கள். அதாவது நமது ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 87.74 லட்சங்கள். ரஜினி, கமல் படங்களுக்கு அடுத்து விஜய் படங்களுக்கே யுகே-யில் அதிக வரவேற்பு என்பதை இந்த வசூல் உறுதி செய்திருக்கிறது.
fredag den 11. februar 2011
ஒட்டு மொத்த தமிழ் நாட்டு வசூல் காவலன் 21கோடி
மூன்று ஆண்டுகள் கழித்தே விஜய் அரசியலுக்கு வருவார் என்று அவரது அப்பா சொன்னாலும்,
தேர்தல் நேரத்தில் என்ன அலை அடிக்கிறது என்பதைப் பார்த்து அதிரடியாக தனது அரசியல் எண்ட்ரியை தொடங்க இருக்கிறார் விஜய்என்று நம்பகமான தகவல் கிடைக்கிறது
அதிமுகவுக்கு சாதகமான அலை இருக்கும் பட்சத்தில் அதிமுகவுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பதன் மூலம் தனது நிஜ அரசியல் எண்ட்ரியை தொடங்குவார் என்கிறது அந்த நம்பகமான செய்தி.
பிப்ரவரியில் திருச்சியில் நடைபெற இருந்த விஜய் ரசிகர் மன்ற மாநாட்டை கேன்சல் செய்து விட்ட ஏமாற்றத்தில் இருக்கும் ரசிகர்களை சுற்றுப்பயனம் மூலம் சந்திக்க இருந்த விஜய்,
அதையும் தற்போது ரத்து செய்து விட்டாராம். காரணம் தேவையில்லாமல் இப்போது அலைய வேண்டாம். பிரச்சாரம் சூடு பிடிக்கும் சமயத்தில் அதிமுக ஆதரவு பயணமாக அதை வைத்துக் கொள்ளுங்கள். மன்ற வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி தேவையோ அதில் எந்த பேரமும் இல்லாமல் கொடுக்கத் தயார் என்று கூறிவிட்டார்களாம் அதிமுக தலைமை தரப்பில். இதனால் செம உற்சாகத்தில் இருக்கிறது விஜய் மன்ற வட்டாரம்.
இது ஒருபுறம் இருக்க... பொங்கல் ரிலீஸில் பாக்ஸ் ஆபீஸில் வசூல் அள்ளிக்கொண்டிருப்பது சிறுத்தையா இல்லை காவலனா என்று அறிவிக்க கணக்கு வழக்கு பார்த்த்தில் சிறுத்தையை பின்னுக்கு தள்ளிவிட்டாரம் காவலன்.
இதுவரை 21 கோடி வசூல் செய்திருக்கிறதாம் காவலன். சிறுத்தை 16 கோடி. விஜய் கிட்ட மோத முடியுமா என்கிறார்கள் கனிசமாக லாபம் பார்த்து வரும் விநியோகஸ்தர்கள்.!
நண்பனுடன் இணைந்தார் லாரன்ஸ்
ஷங்கர் இயக்க்கும் 3 இடியட்ஸ் ரீமேக்கான நண்பன் படத்தில் ஏற்கெனவே இளையதளபதி விஜய், ஜீவா, எஸ் ஜே சூர்யா, ஸ்ரீகாந்த் என நான்கு ஹீரோக்கள் நடிக்கிறார்கள். இப்போது ஐந்தாவதாக ராகவா லாரன்ஸும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். படத்தில் அஸ்தி கரைக்கும் ஒரு பாத்திரத்தில் அவர் வருகிறாராம். இந்த வேடத்தில் நடி...க்க முதலில் நடிகர் பிரசன்னாவைத்தான் கேட்டிருந்தார்களாம். தேதிகள் இல்லாத காரணத்தால் அவருக்குப் பதில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். அத்துடன் சத்யராஜ் கல்லூரி முதல்வர் வேடத்தில் நடிக்கிறார். பாய்ஸ் படத்திற்க்கு பின்னர் துடிப்பான இளைஞர் பட்டாளத்துடன் பணியாற்றுவதால் படுகுஷியாக இருக்கிறார் ஷங்கர். இலியானா, அனுயா நாயகிகளாக நடிக்கும் இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் ஊட்டியில் முடிந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது. அதில் விஜய் கலந்துகொள்கிறார்
lørdag den 5. februar 2011
யுகே-யில் காவலன்
யுகே-யில் காவலன் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் வெளியான பிறகே யுகே-யில் காவலன் வெளியானது. இப்படம் ஆடுகளம், சிறுத்தை படங்களைவிட அதிகம் வசூலித்தது மட்டுமின்றி இப்போதும் கலெக்சனை அள்ளி வருகிறது.
முதல் வார இறுதியில் யுகே பாக்ஸ் ஆஃபிஸில் 23வது இடத்தைப் பிடித்த விஜய் படம் இரண்டாவது வார இறுதியில் 29வது இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது வார இறுதியில் 11 திரையிடல்களில் இப்படம் 18,562 பவுண்ட்களை வசூலித்துள்ளது. இரண்டாவது வாரம் வரை இதன் மொத்த யுகே வசூல் 96,889 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் 71.11 லட்சங்கள்.
2011ல் வெளியான தமிழ்ப் படங்களில் இதுவே டாப் யுகே கலெக்சன் என்பது குறிப்பிடத்தக்கது.
onsdag den 2. februar 2011
விஜய் பிறந்தநாளில் வேலாயுதம்
வேலாயுதம் படத்தில் படுபிசியாக இருக்கிறார் நடிகர் விஜய். இப்படம் வருகிற ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாளில் ரிலீஸ் ஆகிறது.
பல்வேறு பிரச்சனைகளையும் தாண்டி "காவலன்" படம் விளம்பரம் இன்றி விண்ணைத் தொட்டது. பொங்கலுங்கு வந்த படங்களில் காவலன் படம்தான் சூப்பர்ஹிட். இதனையடுத்து ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கும் படம் "வேலாயுதம்". இப்படத்தில் விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிக்கின்றனர். விஜய்யின் தங்கையாக சரண்யா மோகன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்தை ஜூன் மாதம் 22ம் தேதி, விஜய் பிறந்த நாளன்று ரிலீஸ் செய்யவுள்ளனர்.
Abonner på:
Opslag (Atom)