lørdag den 5. februar 2011

யுகே-யில் காவலன்


யுகே-யில் காவலன் மிகப் பெ‌ரிய வெற்றியை‌ப் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் வெளியான பிறகே யுகே-யில் காவலன் வெளியானது. இப்படம் ஆடுகளம், சிறுத்தை படங்களைவிட அதிகம் வசூலித்தது மட்டுமின்றி இப்போதும் கலெ‌க்சனை அள்ளி வருகிறது.

முதல் வார இறுதியில் யுகே பாக்ஸ் ஆஃபிஸில் 23வது இடத்தைப் பிடித்த விஜய் படம் இரண்டாவது வார இறுதியில் 29வது இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது வார இறுதியில் 11 திரையிடல்களில் இப்படம் 18,562 பவுண்ட்களை வசூலித்துள்ளது. இரண்டாவது வாரம் வரை இதன் மொத்த யுகே வசூல் 96,889 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் 71.11 லட்சங்கள்.

2011ல் வெளியான தமிழ்ப் படங்களில் இதுவே டாப் யுகே கலெ‌க்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

Ingen kommentarer:

Send en kommentar