søndag den 14. august 2011

வேலாயுதம் ஓடியோ வெளியாகிறது


விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வேலாயுதம் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் வரும் 28-ம் திகதி நடக்கிறது.
விஜய், ஜெனிலியா, ஹன்ஸிகா மோத்வானி நடித்துள்ள புதிய படம் வேலாயுதம். ஜெயம் எம் ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார்.ரூபாய் 45 கோடி செலவில் உருவாகியுள்ள படம் இது. ஓடியோவை சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது. அதிமுகவுக்கு தீவிர ஆதரவாளராக விஜய் மாறிவிட்டதால், இந்தப் படத்தின் ஓடியோவை, முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என்று கூறி வந்தனர்.

ஆனால் இப்போது மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் வேலாயுதம் இசை வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: வேலாயுதம் பட பூஜையை ரசிகர்கள் முன்னிலையில் சென்னையில் பிரமாண்டமாக நடத்தினோம்.

இப்போது படத்தின் ஓடியோவை மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். வரும் ஓகஸ்ட் 28-ம் திகதி மாலை மதுரையில் இந்த விழா நடக்கிறது. ரசிகர்கள் இந்த விழாவை சிறப்பித்துத் தரவேண்டும் என்று ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

Ingen kommentarer:

Send en kommentar