lørdag den 24. september 2011
வேலாயுதம் ரிலீஸ் தேதி
விஜய் நடித்திருக்கும் வேலாயுதம் ரிலீஸ் தேதி அதகாரப்பூர்வமாகத் தெரிய வந்திருக்கிறது. தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று சொல்லப்பட்ட இப்படம் அதற்கு முன்பே திரைக்கு வருகிறது.
ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை ஜெயம் ராஜா இயக்கியுள்ளார். ஜெனிலியா, ஹன்சிகா என விஜய்க்கு இரு ஜோடிகள். பழைய தெலுங்குப் படமொன்றின் ரீமேக் என்று கூறப்படுகிறது. விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் அக்டோபர் 26 தீபாவளி அன்று வெளியாகும் என்று சொல்லப்பட்டது. தற்போது ஒருநாள் முன்னதாக அதாவது அக்டோபர் 25ஆம் தேதியே திரைக்கு வருகிறது. இதனை படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்றிருக்கும் ஐங்கரன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
tirsdag den 20. september 2011
விஜய்யின் புதிய ஜோடி
விஜய், முருகதாஸ் இணையும் புதிய படத்தில் சந்தோஷ் சிவன் பணியாற்றுகிறார் என்ற நம்முடைய நேற்றைய செய்தி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
பிரமாண்டமாக உருவாகும் இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க மாடல் அழகி ஏஞ்சலா ஜான்ஸனை ஒப்பந்தம் செய்துள்ளார் முருகதாஸ். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனும், ஆஸ்கர் ரவிச்சந்திரனும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர்.
அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கல் ஸ்பெஷலாக வரும் 'நண்பன்'!
ஷங்கர் இயக்கும் படம் ஒன்று எந்த பரபரப்பும் இல்லாமல் இத்தனை அமைதியுடன், வேக வேகமாக படமாவது அநேகமாக நண்பனாகத்தான் இருக்கும்!
படம் ஆரம்பித்த போது, யார் ஹீரோ என்பதில் மட்டும் மகா குழப்பம் நிலவியது. விஜய்தான் ஹீரோ என்று முடிவான பிறகு, ஊட்டி, சென்னை என்று தமிழ்நாட்டுக்குள்ளேயே சுற்றிச் சுற்றிப் படமாக்கிய ஷங்கர், இதோ கிட்டத்தட்ட படத்தை முடித்தேவிட்டார்!
ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ், இலியானா என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இந்தப் படம், தெலுங்கிலும் டப் செய்யப்படுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
வரும் பொங்கலுக்கு இந்தப் படத்தை பிரமாண்டமாய் ரிலீஸ் செய்யும் வேலைகளை இப்போதிலிருந்தே துவங்கிவிட்டார் ஷங்கர்.
Abonner på:
Opslag (Atom)