lørdag den 24. september 2011

வேலாயுதம் ‌ரிலீஸ் தேதி



விஜய் நடித்திருக்கும் வேலாயுதம் ‌ரிலீஸ் தேதி அதகார‌ப்பூர்வமாக‌த் தெ‌ரிய வந்திருக்கிறது. தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று சொல்லப்பட்ட இப்படம் அதற்கு முன்பே திரைக்கு வருகிறது.

ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயா‌ரித்திருக்கும் இந்தப் படத்தை ஜெயம் ராஜா இயக்கியுள்ளார். ஜெனிலியா, ஹன்சிகா என விஜய்க்கு இரு ஜோடிகள். பழைய தெலுங்குப் படமொன்றின் ‌ரீமேக் என்று கூறப்படுகிறது. விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் அக்டோபர் 26 தீபாவளி அன்று வெளியாகும் என்று சொல்லப்பட்டது. தற்போது ஒருநாள் முன்னதாக அதாவது அக்டோபர் 25ஆம் தேதியே திரைக்கு வருகிறது. இதனை படத்தின் வெளிநாட்டு உ‌ரிமையை பெற்றிருக்கும் ஐங்கரன் நிறுவனம் தெ‌ரிவித்துள்ளது.

Ingen kommentarer:

Send en kommentar