mandag den 31. oktober 2011

வேலாயுதம் படத்தை பற்றி கூறுகிறார் நடிகர் விஜய்


நடிகர் விஜய்யின் `வேலாயுதம்' படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது, இதுகுறித்து நடிகர் விஜய் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது நான் நடித்த 52 படங்களை விட `வேலாயுதம்' பெரிய வெற்றியாகியுள்ளது என்கின்றனர், ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றது.
இப்படியொரு அருமையான படம் கொடுத்த இயக்குனர் ராஜாவுக்கு நன்றி, தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக அவர் வருவார்.

ஜெயம்ரவியும் இந்த படத்தின் கதை விவாதத்தில் பங்கேற்றார், ஓஸ்கார் ரவிச்சந்திரன் படத்துக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து கொடுத்தார்.

விஜய் ஆண்டனி ரீ ரிக்கார்டிங் படத்துக்கு பெரிய பலம், படத்துக்கு பிரிண்ட்கள் அதிகம் போடுறாங்க, தியேட்டர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

இந்த படம் வெற்றியானதற்கு எம்.ஜி.ஆர். பார்முலா படத்தில் உள்ளது என்கின்றனர், எம்.ஜி.ஆர். பார்முலாவில் படம் பண்ண எல்லோரும் ஆசைப்படுவர், அது தவறு அல்ல எம்.ஜி.ஆர். பாணியில் நடிக்க நல்ல கதை அமையணும். அது `வேலாயுதம்' படத்தில் இருக்கின்றது என்றார்.

அடுத்து நண்பன் படம் பொங்கலுக்கு வெளியாகயுள்ளது, இணையதளங்களில் வேலாயுதம் படம் வந்ததாக தகவல் வந்தது, அதை தடுக்க எனது ரசிகர்கள் முயற்சி எடுத்துள்ளனர்.

புதுப்படங்களை இது போல் இணையதளத்தில் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

நான் ஒரே பாணியில் நடிப்பதாக சொல்வது தவறு. `காவலன்' படத்தில் என் பாணி இல்லை, சித்திக் வேறு மாதிரி அப்படத்தை எடுத்துள்ளார்.

அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என்று கூறியுள்ளார்.

Ingen kommentarer:

Send en kommentar