søndag den 6. november 2011

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்


வேலாயுதம் படத்தின் வெளிநாட்டு உரிமையை ஐங்கரன் நிறுவனம் வாங்கி, படத்தை பிரித்தானியாவில் வெளியிட்டுள்ளது.

இளையதளபதி விஜய், ஹன்சிகா, ஜெனிலியா நடிப்பில் வெளிவந்த படம் வேலாயுதம். இப்படத்தை ஜெயம் ராஜா இயக்க, ஓஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார்.
இப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது.

முதல் வாரத்தை விட இரண்டாம் வாரத்தில் அதிக தியேட்டர்களில் வெளியாகி இருப்பதால், அந்த சந்தோஷத்தை கொண்டாட படக்குழுவினருக்கு தனது வீட்டில் விருந்தளித்தார் விஜய்.

வேலாயுதம் படத்தின் வெளிநாட்டு உரிமையை ஐங்கரன் நிறுவனம் வாங்கியிருப்பதால் ரசிகர்களும், படக்குழுவினர்களும் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.

பிரித்தானியாவில் வேலாயுதம் 17 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு(ஒக்டோபர் 26-30 வரை) ரூ.1.03 கோடி வசூலித்து உள்ளது. அதே நேரம் ஏழாம் அறிவு திரைப்படம் 19 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு(ஒக்டோபர் 26-30 வரை) 85.77 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது.

வேலாயுதம் படத்தின் இந்த வெற்றியால் சந்தோஷத்தில் இருக்கும் விஜய், அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் நண்பன் படத்தினையும் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

வேலாயுதம் படத்தின் இந்த வெற்றியால் மீண்டும் விஜய்- ஜெயம் ராஜா கூட்டணி சேர வாய்ப்புள்ளது என்று கொலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Ingen kommentarer:

Send en kommentar