
எத்தனை தடைகள் வந்தாலும் 'நண்பன்' படத்தை முடித்துக் கொடுத்த கையோடு 'பகலவன்' படத்தை தொடங்குவதில் உறுதியாக இருக்கின்றனர்.
சீமான், விஜய், தாணு டீம். மருத்துவர் புகழேந்தியாக, எம்.பி.பி.எஸ். படித்து விட்டு கிராமத்துக்குச் சென்று எழை மக்களுக்கு மருத்துவம் பார்க்கும் விஜய் காலாவதியான மருந்து மாபியாவுடம் மோதுவதுதான் கதையாக இருந்ததாம் முதலில்.
ஆனால் தற்போது அதிலும் ஒரு அதிரடி மாற்றத்தை சீமான் கொண்டு வந்து விட்டதால் 'பகலவன்' கதையில் பெரிய மாற்றம் என்கிறார்கள் சீமானின் உதவியாளர்கள். அதாவது அனைத்து துறைகளையும் கண்மூடித்தனமாக அரசு தனியார் மயமாக்குவதை கடுமையாக எதிர்த்து போராடும் ஒரு துடிப்புமிக்க இளைஞனின் கதைதான் 'பகலவன்' என்கிறார்கள்.
படத்தின் புதிய திரைக்கதையின்படி டாக்டராக இருக்கும் விஜய்க்கும் ஒரு முரட்டு போலீஸ் அதிகாரிக்கும் இடையில் பிரச்சினை வெடிக்கிறது. அப்போது போலீஸ் அதிகாரி 'நீ ஒரு டாக்டர். காய்ச்சல்ன்னு வர்றவனுக்கு காலனா மாத்திரை கொடுக்குறவன் நீ உன்னால் என்னை என்ன செய்ய முடியும்' என்று கேட்கிறாராம்.
இதில் கோபம்கொள்ளும் விஜய், ஐ.பி.எஸ் படித்து போலீஸ் அதிகாரியாக உயர்ந்து அந்த வில்லன் அதிகாரியுடன் மோதி காலாவதி மருந்து கும்பலை காலி பண்ணுவதுதான் விஜய்யின் 'பகலவன்' என்கிறார்கள். ஏற்கெனவே 'போக்கிரி' படத்தில் விஜய் போலீஸ் சீருடையில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Ingen kommentarer:
Send en kommentar