
தனது பிறந்தநாளையொட்டி கண்தானம் செய்யும்படி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் விஜய்.
நடிகர் விஜய்க்கு நாளை (புதன்கிழமை) பிறந்தநாள். இந்த பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு அவர் விடுத்துள்ள வேண்டுகோள்:
"எனது பிறந்தநாளை ஏழை-எளியவர்களுக்கு நற்பணி செய்யும் நாளாக கொண்டாடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் இயக்கத்தை சேர்ந்த 100 பேர் சென்னையில், என் முன்னிலையில் கண்தானம் செய்கிறார்கள். தமிழகம் எங்கும் என்னை நேசிக்கும் அனைவரும் கண்தானம் செய்தால் மகிழ்ச்சி அடைவேன்.
இதேபோல் ரத்ததானம் செய்வதுடன், ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஏழை மாணவர்-மாணவிகளுக்கு உதவுதல், ஏழைப்பெண்களுக்கு உதவுதல் போன்ற சமூக நலப்பணிகளை செய்து மக்கள் இயக்கத்தை வலுவடைய செய்ய வேண்டும்.''
-இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியிருக்கிறார்.
Ingen kommentarer:
Send en kommentar