mandag den 21. juni 2010
torsdag den 17. juni 2010
விஜய் 'தங்கச்சி'யானார் சரண்யா மோகன்!

ஜெயம் ராஜா இயக்கும் வேலாயுதம் படத்தில் விஜய்யின் தங்கை வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சரண்யா மோகன்.
இதுபற்றி சரண்யா கூறுகையில், "விஜய்க்கு தங்கையாக நடிப்பதில் பெருமைதான். எனது வேடம் சிறப்பாக உள்ளது. விஜய்யுடன் நடிக்கும் போது கிடைக்கும் புகழும் ரீச்சும் என்னவென்பது புரிகிறது. அதனால்தான் மறுபேச்சின்றி ஒப்புக் கொண்டேன்," என்றார்.
onsdag den 16. juni 2010
விஜய் பட ஒளிப்பதிவாளர் மாற்றம்

விஜய் சித்திக் இயக்கத்தில் காவல்காரன் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் நடிக்கும் படம் வேலாயுதம். ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்க, ஜெயம் ராஜா இயக்குகிறார்.
இந்தப் படத்தில் இரு ஹீரோயின்கள். ஒருவர் ஹன்சிகா மோத்வானி. இன்னொருவர் சர்ச்சையில் சிக்கிய ஜெனிலியா. இவர்களுடன் சரண்யா மோகனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விஜய் படத்தில் இத்தனை இளம் பெண் கதாபாத்திரங்கள் இடம் பெறுவது இதுவே முதல் முறை.
வேலாயுதத்துக்கு மதி ஒளிப்பதிவு செய்வார் என முதலில் கூறப்பட்டது. தற்போது அவருக்குப் பதில் ஹரியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ப்ரியனை ஒப்பந்தம் செய்துள்ளனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
mandag den 14. juni 2010
விஜய்யுடன் இணைந்து சீமான்-தாணு

அரசியலில் கால் வைத்த பிறகு சீமானிடமிருந்து கலைப் படைப்பு எதுவும் வரவில்லை. அந்தக் குறையைத் தீர்க்க இப்போது பகலவன் என்ற படத்தை உருவாக்குகிறார்.
இந்தப் படத்தைத் தயாரிப்பவர், பிரமாண்டம் என்ற சொல்லுக்கு சினிமாவில் புதிய அர்த்தம் தந்த கலைப்புலி எஸ் தாணு.
விஜய் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் மற்றும் இதர டெக்னீஷியன்கள் குறித்து
இன்னும் ஓரிரு வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
இதுகுறித்து இயக்குநர் சீமான் கூறுகையில், "நானும் தம்பி விஜய்யும் இணைந்து புதிய படம் செய்வது உறுதியானதுதான். அண்ணன் தாணுவுக்காக இந்தப் படத்தை உருவாக்குகிறோம். தரத்தில் இரண்டு மடங்கு 'தம்பி'யாக இந்தப் படம் அமையும்..." என்றார்.
தயாரிப்பாளர் தாணு கூறுகையில், "சச்சினுக்குப் பிறகு தம்பி விஜய்யுடன் இணைந்து படம் செய்கிறேன். தம்பி சீமானைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. அவருடைய இயக்கத்தில் படம் செய்வது பெருமையாக உள்ளது. படம் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்", என்றார்.
mandag den 7. juni 2010
வேலாயுதம்

ஜெயம் ராஜா இயக்க, ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் இந்தப் படம், நாகார்ஜூனா - சௌந்தர்யா நடித்த 'ஆஸாத்' என்ற பழைய தெலுங்குப் படத்தின் ரீமேக்.
ஆக்ஷன், காதல் கலந்த இந்தப் படத்தில், இருப்பவர்களிடம் பிடுங்கி இல்லாதவர்களுக்குத் தரும் நவீன ராபின்ஹூட்டாக நடிக்கிறாராம் விஜய்.
இந்தப் படத்துக்கான ஃபோட்டோ ஷூட் நேற்று சாலிகிராமத்தில் உள்ள ஸ்டுடியோவில் நடந்தது. படத்தின் நாயகி ஹன்ஸிகா மோத்வானி இதில் பங்கேற்றார்.
onsdag den 2. juni 2010
tirsdag den 1. juni 2010
ரஜினி படத்தில் விஜய்!
25 வருடங்களுக்கு முன் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் ரஜினி, அம்பிகா, நடிப்பில் வெளிவந்த படம், ‘நான் சிவப்பு மனிதன்’. அப்படத்தை ரீமேக் செய்து தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார் எஸ்.ஏ.சி. இதில் ரஜினி நடித்த வேடத்தில் விஜய் நடிக்கிறாராம். ‘தயாரிப்பு மட்டும் நான். டைரக்டர் முடிவாகவில்லை’ என எஸ்.ஏ.சி. தெரிவித்துள்ளார். இன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்ப, ‘நான் சிவப்பு மனிதன்’ கதையில் மாற்றங்கள் செய்யப்படுமாம்.
Abonner på:
Opslag (Atom)



