
அரசியலில் கால் வைத்த பிறகு சீமானிடமிருந்து கலைப் படைப்பு எதுவும் வரவில்லை. அந்தக் குறையைத் தீர்க்க இப்போது பகலவன் என்ற படத்தை உருவாக்குகிறார்.
இந்தப் படத்தைத் தயாரிப்பவர், பிரமாண்டம் என்ற சொல்லுக்கு சினிமாவில் புதிய அர்த்தம் தந்த கலைப்புலி எஸ் தாணு.
விஜய் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் மற்றும் இதர டெக்னீஷியன்கள் குறித்து
இன்னும் ஓரிரு வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
இதுகுறித்து இயக்குநர் சீமான் கூறுகையில், "நானும் தம்பி விஜய்யும் இணைந்து புதிய படம் செய்வது உறுதியானதுதான். அண்ணன் தாணுவுக்காக இந்தப் படத்தை உருவாக்குகிறோம். தரத்தில் இரண்டு மடங்கு 'தம்பி'யாக இந்தப் படம் அமையும்..." என்றார்.
தயாரிப்பாளர் தாணு கூறுகையில், "சச்சினுக்குப் பிறகு தம்பி விஜய்யுடன் இணைந்து படம் செய்கிறேன். தம்பி சீமானைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. அவருடைய இயக்கத்தில் படம் செய்வது பெருமையாக உள்ளது. படம் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்", என்றார்.
Ingen kommentarer:
Send en kommentar