
விஜய்யின் ஆரம்பகால வெற்றிப் படங்களில் பாதியை தயாரித்தவர் சூப்பர் குட் பிலிம்ஸ் சௌத்ரி. சௌத்ரியும், விஜய்யும் சேர்ந்தால் சக்சஸ் என்று சொல்லும் அளவுக்கு வெற்றிக் கூட்டணி இது. பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், லவ் டுடே, திருப்பாச்சி என்று அனைத்தும் ஹிட் படங்கள்.
தற்போது காவல்காரன் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதனைத் தொடர்ந்து ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயம் ராஜா இயக்கும் வேலாயுதம் படம் காத்திருக்கிறது.
இந்த இரு படங்களுக்குப் பிறகு தயாராகும் விஜய் படத்தை தாணு தயாரிக்கிறார். பகலவன் என்ற அந்தப் படத்தை இயக்குவது சீமான்.
இந்த மூன்று படங்களுக்குப் பிறகு சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பதாக நம்பத்குந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்கட்ட பேச்சுவார்த்தை ஜெயமாக முடிந்ததாகவும் சொல்கிறார்கள்.
சௌத்ரி, விஜய் கூட்டணியின் வெற்றி தொடர்ந்தால் இன்டஸ்ட்ரிக்கு நல்லது.
Ingen kommentarer:
Send en kommentar