torsdag den 30. juni 2011

விஜய்யின் வியத்தகு மாற்றம் !!


முன்பொரு முறை ஊடக சந்திப்பு ஒன்றில் இயக்குனர் தரணி சொன்ன வார்த்தைகள் இது.
விஜய் சாரிடம் கதை சொல்லப் போகும் போது அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பேன்.


விழுந்து விழுந்து சிரிக்கிற காட்சிகளில் கூட மிக அமைதியாக புன்னகைப்பார். அதுவே எனக்கு பெரிய திருப்தியாக இருக்கும். அவர் இப்படி சிரித்துவிட்டால், தியேட்டரில் அத்தனை பேரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள் என்று அர்த்தம்.

தரணியின் இந்த வார்த்தைகளை அதே அமைதியோடு கேட்டுக் கொண்டிருந்தார் விஜய்யும். அப்படிப்பட்டவரிடம் இன்று பெரிய மாற்றம் வந்திருப்பதாக சந்தோஷப்படுகிறார்கள் திரையுலகத்தில். தன்னிடம் வந்த மிக முக்கியமான கதைகளை கூட வேண்டாம் என்று திருப்பி அனுப்பியவர் அவர்.

”சிங்கம்” படத்தின் கதையை முதலில் விஜய்யிடம் தான் சொன்னார் ஹரி. ”காக்க காக்க” கதையை கூட முதலில் இவரிடம் தான் சொன்னார் கவுதம். ”கஜினி” மட்டும் என்னவாம்? முருகதாஸ் முதலில் வந்ததே விஜய்யிடம் தான். ”அயன்” கதையின் நாயகனாக கே.வி.ஆனந்தின் மனதில் சித்தரிக்கப்பட்டவரும் இவரே தான்.

இப்படியெல்லாம் தேடி வந்த கதைகளையும் இயக்குனர்களையும் ஏதோ சில காரணங்களால் மறுதலித்த விஜய், தற்போது அடியோடு மாறியிருக்கிறார். கடந்த சில வாரங்களாக மேற்படி இயக்குனர்கள் அத்தனை பேரையும் தனித்தனியே தன் வீட்டிற்கு அழைத்தாராம். மனம் விட்டு பேசியவர், தனது அன்பை பலப்படுத்தும் வகையில் அவர்களுக்கு விருந்தும் அளித்தாராம்.

விஜய்யின் இந்த வியத்தகு மாற்றம், இன்டஸ்ட்ரி முழுக்க கசிந்து எல்லாரையும் இன்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

onsdag den 22. juni 2011

உற்சாகத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய விஜய்


முன் எப்பொழுதும் இல்லாத உற்சாகத்துடன் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் நடிகர் விஜய்.
இந்த நாளில் தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களை ரத்த தானம், கண் தானம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மேலும், எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் இன்று பிறக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கிறார் விஜய். இந்த மருத்துவமனையில் தான் விஜய் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் மொத்தம் 500 குழந்தைகளுக்கு அவர் சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கப்படுவதாக அவரது பிஆர்ஓ செல்வகுமார் தெரிவித்துள்ளார். இது தவிர, சாலி கிராமத்தில் உள்ள பாலலோக் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. இதனை விஜய் தொடங்கி வைத்தார்.

ஷோபா திருமண மண்டபத்தில் ஏழைகளுக்கு இலவச புடவை, வேட்டிகளையும், மாணவ - மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களையும் விஜய் வழங்கினார்.

சின்மயா நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் இன்று மதிய உணவாக பிரியாணி வழங்குகிறார்.

tirsdag den 21. juni 2011

நடிகர் விஜய் வேண்டுகோள்


தனது பிறந்தநாளையொட்டி கண்தானம் செய்யும்படி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய்க்கு நாளை (புதன்கிழமை) பிறந்தநாள். இந்த பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு அவர் விடுத்துள்ள வேண்டுகோள்:

"எனது பிறந்தநாளை ஏழை-எளியவர்களுக்கு நற்பணி செய்யும் நாளாக கொண்டாடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் இயக்கத்தை சேர்ந்த 100 பேர் சென்னையில், என் முன்னிலையில் கண்தானம் செய்கிறார்கள். தமிழகம் எங்கும் என்னை நேசிக்கும் அனைவரும் கண்தானம் செய்தால் மகிழ்ச்சி அடைவேன்.

இதேபோல் ரத்ததானம் செய்வதுடன், ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஏழை மாணவர்-மாணவிகளுக்கு உதவுதல், ஏழைப்பெண்களுக்கு உதவுதல் போன்ற சமூக நலப்பணிகளை செய்து மக்கள் இயக்கத்தை வலுவடைய செய்ய வேண்டும்.''

-இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியிருக்கிறார்.

lørdag den 18. juni 2011

சீமான் அதிரடி மாற்றத்தில் ஆரம்பிக்கும் விஜயின் பகலவன்


எத்தனை தடைகள் வந்தாலும் 'நண்பன்' படத்தை முடித்துக் கொடுத்த கையோடு 'பகலவன்' படத்தை தொடங்குவதில் உறுதியாக இருக்கின்றனர்.
சீமான், விஜய், தாணு டீம். மருத்துவர் புகழேந்தியாக, எம்.பி.பி.எஸ். படித்து விட்டு கிராமத்துக்குச் சென்று எழை மக்களுக்கு மருத்துவம் பார்க்கும் விஜய் காலாவதியான மருந்து மாபியாவுடம் மோதுவதுதான் கதையாக இருந்ததாம் முதலில்.

ஆனால் தற்போது அதிலும் ஒரு அதிரடி மாற்றத்தை சீமான் கொண்டு வந்து விட்டதால் 'பகலவன்' கதையில் பெரிய மாற்றம் என்கிறார்கள் சீமானின் உதவியாளர்கள். அதாவது அனைத்து துறைகளையும் கண்மூடித்தனமாக அரசு தனியார் மயமாக்குவதை கடுமையாக எதிர்த்து போராடும் ஒரு துடிப்புமிக்க இளைஞனின் கதைதான் 'பகலவன்' என்கிறார்கள்.

படத்தின் புதிய திரைக்கதையின்படி டாக்டராக இருக்கும் விஜய்க்கும் ஒரு முரட்டு போலீஸ் அதிகாரிக்கும் இடையில் பிரச்சினை வெடிக்கிறது. அப்போது போலீஸ் அதிகாரி 'நீ ஒரு டாக்டர். காய்ச்சல்ன்னு வர்றவனுக்கு காலனா மாத்திரை கொடுக்குறவன் நீ உன்னால் என்னை என்ன செய்ய முடியும்' என்று கேட்கிறாராம்.

இதில் கோபம்கொள்ளும் விஜய், ஐ.பி.எஸ் படித்து போலீஸ் அதிகாரியாக உயர்ந்து அந்த வில்லன் அதிகாரியுடன் மோதி காலாவதி மருந்து கும்பலை காலி பண்ணுவதுதான் விஜய்யின் 'பகலவன்' என்கிறார்கள். ஏற்கெனவே 'போக்கிரி' படத்தில் விஜய் போலீஸ் சீருடையில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

torsdag den 16. juni 2011

விஜய்யின் ‌வேலாயுதம் ஓடியோ வெளியீடு


தொடர்ந்து தள்ளிபோய் கொண்டே இருந்த விஜய்யின் "வேலாயுதம்" படத்தின் ஓடியோ வெளியீடு அடுத்த மாதம் ஜூலை 5 ம் திகதி வெளியீடு செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
"காவலன்" படத்திற்கு பிறகு விஜய்யின் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் "வேலாயுதம்".


அதிரடி ஆக்ஷன் கலந்த மசாலா படமாக உருவாகி வரும் இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா, ஹன்சிகா‌ மொத்வானி ஆகியோர் நடிக்கின்றனர். "ஜெயம்" ராஜா இயக்கும் இப்படத்தை, ஓஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.

படத்தின் சூட்டிங் முடியும் தருவாயில் இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ஓடியோ வெளியீடு தொடர்ந்து தள்ளிக்கொண்டே போய் வந்த நிலையில், அடுத்த மாதம் ஜூலை 5 ம் திகதி திட்டவட்டமாக வெளியீடு செய்ய இருக்கின்றனர்.

மெலோடி, குத்துப்பாட்டு என்று ‌விஜய் ஆண்டனியின் இசையில் மொத்தம் 7 பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக விஜய்க்கு ஓபனிங் சாங்கை மட்டும் கிட்டத்தட்ட ரூ.2 கோடி செலவில் படமாக்கியுள்ளனர்.

VIJAY & SALMAN




mandag den 13. juni 2011

காவலன் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரித்த சீனர்கள்... விஜய் வியப்பு!


ஷாங்காய் நகரில் திரையிடப்பட்ட காவலன் படத்தைப் பார்த்து சீன ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இது எனக்கு வியப்பைத் தந்தது என நடிகர் விஜய் கூறினார்.

ஷாங்காய் திரைப்பட விழா சீனாவில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் விஜய் நடித்த காவலன் (11-ந்தேதி) மாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. ஆங்கில - சீன மொழி சப்-டைட்டிலுடன் காவலன் திரையிடப்பட்டது.

சீன மொழியைச் சார்ந்த அனைவரும் ஆர்வத்துடன் படம் பார்த்தனர். ஒவ்வொரு காட்சியையும் ரசித்ததுடன் காமெடி காட்சிகளில் விழுந்து விழுந்து சிரித்தது எனக்கு ஆச்சரியத்தை தந்தது என்று கூறினார் விஜய்.

படத்தின் கடைசி 20 நிமிடங்கள் அமைதியாக ரசித்த ரசிகர்கள் கண் கலங்கினர். படம் முடிந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள். படம் பார்த்து முடிந்ததும் அவர்கள் மத்தியில் விஜய் பேசினார்.

அவர் கூறுகையில், "வெளிநாடுகளில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வது இதுதான் முதல் முறை. ஷாங்காய் பட விழாவில் கலந்து கொண்டது முற்றிலும் எனக்கு புது அனுபவம்.

நடிகர், மொழி, தேசம் இவற்றை கடந்து ஒரு நல்ல படம் எந்த நாட்டு மக்களையும் கவரும் என்பதற்கு இது உதாரணம். படம் பார்த்து முடித்தவுடன் என் கேரக்டரான பூமி என்ற பெயரைச் சொல்லி அவர்கள் பாராட்டியது எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது. மொத்தத்தில் என் வாழ்நாளில் இது மறக்க முடியாத அனுபவம்.

ஜாக்கிசானுக்கு இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம். (பலத்த கைதட்டல்) நான் படிக்கும் போது அவருடைய படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். இன்று அவரது ஊரில், நான் நடித்த காவலன் திரையிடப்பட்டது பெரும் பாக்கியமாக நினைக்கிறேன். இங்குள்ள ரசிகர்களை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்," என்றார்.

விஜய்யின் பேச்சு அனைவரையும் கவரவே, எழுந்து நின்று கைதட்டினார்கள். ஷாங்காய் திரைப்பட குழுவிற்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக விஜய் நினைவு பரிசை வழங்கினார்.