விஜய் தனது 50வது படமான சுறாவில் நடித்து வருகிறார். அடுத்து அவர் யார் இயக்கத்தில் நடிக்கிறார்? சித்திக் அல்லது ஜெயம் ராஜா?
விஜய்யை நான் இயக்குவது முடிவு செய்யப்பட்ட விஷயம். அது அவரது 51வது படமா இல்லை 52வது படமா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது என்று கூறியிருந்தார் ஜெயம் ராஜா. சித்திக் தனது பாடிகார்ட் படத்தை விஜய்யை வைத்து ரீமேக் செய்ய அவசரம் காட்டுவதால் எழுந்த குழப்பம் இது.
இந்நிலையில் விஜய்யின் 51வது படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கிறது, ஜெயம் ராஜா இயக்குகிறார் என ஆஸ்கர் பிலிம்ஸ் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் விஜய்யின் 51வது படம் உறுதியாகியுள்ளது.
Ingen kommentarer:
Send en kommentar