lørdag den 6. marts 2010
தளபதியின் 'சுறா'
சுறா இது விஜய்யின் 50வது படம் என்பதால், படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.
என்ன சொல்கிறார் படத்தின் இயக்குநர் எஸ்.பி.ராஜகுமார்?
‘‘வழக்கமான விஜய் படத்தோட பத்து மடங்கு பரபரன்னு போகிற திரைக்கதைதான் படத்துக்கு பலம். ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட், காதல்னு கலக்கலான விஷயங்கள் படத்துல நிறைய இருக்கு. அடுத்த காட்சி இப்படித்தான் இருக்கும். இதுதான் கிளைமாக்ஸ்னு யாரும் யூகிக்க முடியாதபடி விர்ர்ர்ர்ருனு போகும். இதை நான் அதிகப்படியா சொல்றேன்னு நினைக்காதீங்க. இதுதான் நிஜம்!’’
சுறா’ என்ன கதை?
விஜய் மீனவர். தன்னோட தனிப்பட்ட நலன்களை மட்டுமே நினைக்காம அடித்தட்டு மக்களுக்கான உரிமைகளையும் போராடி வாங்கி தர்றார்... இப்படி கதையை சொன்னா, உங்களுக்கு ஏதோ தத்துவமா, கருத்து சொல்ற மாதிரி தோμம். ஆனா, அப்படி இல்லாம, பக்கா கமர்ஷியல் லைன்ல சுர்ர்ர்ருனு படம் பண்ணிட்டிருக்கோம்
தமன்னா?
தமன்னா, இப்ப இருக்கிற டாப் ஹீரோயின். எப்பவும் சரியான நேரத்தை கடைப்பிடிக்கிற ஆர்டிஸ்ட். நடிப்புல பின்னியிருக்காங்க. படத்துல அவங்க குறும்புக்கார கல்லூரி மாணவி. பெரும் பணக்காரரின் மகள். ரொம்ப ஸ்டைலான கேரக்டர். அவங்க வர்ற சீனெல்லாம் விழுந்து விழுந்து சிரிக்கிற மாதிரி இருக்கும். வடிவேலு காமெடி படத்துல மிரட்டும்.
விஜய் படத்துல பாடல்கள் ரசனையா இருக்குமே?
இந்தப் படத்துலயும்தான். மணிசர்மா இசைல எல்லா பாடலுமே ஹிட்டாகும். வெரைட்டியா ட்யூன் போட்டிருக்கார். ‘வெற்றிக்கொடி ஏத்து / வீசும் நம்ம காத்து’னு ஆரம்பிக்கிற பாட்டு சும்மா கலர்ஃபுல்லா கலக்கலா இருக்கும். ‘வங்க கடல் எல்லை / நான் சிங்கம் பெத்த பிள்ளை’பரபரப்பான பாடலா விசிலடிச்சு துள்ளிக் குதிக்கும்படியா
இருக்கும்.
ஆக்ஷன் காட்சிகள் எப்படி?
கனல் கண்ணன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை அமைச்சிருக்கார். இதுவரை வராத அளவு வித்தியாசமான ஆக்ஷன் காட்சிகளா இருக்கும். விஜய் அதிகப்படியா ரிஸ்க் எடுத்து சண்டைக்காட்சிகள்ல நடிச்சிருக்கார். பொதுவாவே எல்லா விஷயத்துக்கும் அவர் ரிஸ்க் எடுக்க தயங்காதவர். உதாரணத்துக்கு, கடல்லயிருந்து அரை மைல் தூரத்துக்கு நீச்சலடிச்சு கரைக்கு வரμம். நாங்க நீச்சல் தெரிஞ்ச சிலரை கரையில உட்கார வச்சிருந்தோம். ஆனா, விஜய் நானே பண்றேன்னார். அதே போல நீந்தியும் வந்தார். இது பெரிய ரிஸ்க். ஆத்துல நீச்சலடிக்கற மாதிரி இல்ல, கடல்ல நீச்சலடிக்கிறது. இது எவ்வளவு கஷ்டம்னு அனுபவப்பட்டவங்களுக்கு தெரியும்.
பஞ்ச் டயலாக்?
அது இல்லாம எப்படி? படத்துல விஜய், சூடாகிற காட்சிகள்ல எல்லாம் பஞ்ச் டயலாக் இருக்கும். சாம்பிளுக்கு ஒண்μ: ‘உனக்கு கோவம் வந்தா அடி விழும். எனக்கு கோவம் வந்தா இடி விழும்!’
Abonner på:
Kommentarer til indlægget (Atom)
Ingen kommentarer:
Send en kommentar