torsdag den 20. maj 2010
விஜய் படம் - பிரமாண்ட தொடக்கம்
விஜய்யின் 52வது படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். ஜெயம் ராஜா இயக்கும் இந்தப் படத்துக்கு வேலாயுதம் என்ற பெயர் பரிசீலனையில் உள்ளது.
இந்தப் படத்தின் தொடக்க விழா மிகப் பிரமாண்டமாக நடத்தப்படுகிறது என்று முன்பே குறிப்பிட்டிருந்தோம். பல ஆயிரம் பேர்களுக்கு அன்னதானம் வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரு உள் விளையாட்டரங்கில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. தசாவதாரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை ஆஸ்கர் ரவிச்சந்திரன் இங்குதான் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் தமிழக முதல்வர், ஜாக்கிசான், அமிதாப்பச்சன், மம்முட்டி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
தசாவதாரம் விழாவுக்கு நிகராக விஜய் படத்தின் தொடக்க விழாவும் இருக்கும் என்கிறார்கள்.
Abonner på:
Kommentarer til indlægget (Atom)
Ingen kommentarer:
Send en kommentar