fredag den 30. juli 2010
onsdag den 28. juli 2010
søndag den 25. juli 2010
fredag den 23. juli 2010
விஜய்யின் மெகா ப்ஜெட் படம்
விக்ரமை இயக்கும் திட்டம் கை நழுவியதால் தனது பார்வையை விஜய் பக்கம் திருப்பியிருக்கிறார் யாவரும் நலம் இயக்குனர் விக்ரம் கே.குமார் என சில நாட்கள் முன்பு எழுதியிருந்தோம். விஜய் நடிக்க விக்ரம் கே.குமார் இயக்கும் படம் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டது.
மெகா பட்ஜெட்டில் தயாராகவிருக்கும் இந்தப் படத்தை தயாரிப்பவர் பல ஹிட் படங்களை தந்த ஸ்ரீசூர்யா மூவிஸ் ஏ.எம்.ரத்னம். சில காலம் படத்தயாரிப்பிலிருந்து விலகியிருந்த இவர் தனது ரீஎண்ட்ரியை பிரமாண்டமாக அமைக்க அத்தனை ரிஸ்க்கையும் எடுத்து வருகிறார்.
விக்ரம் கே.குமார் இயக்கும் படத்தின் பட்ஜெட் இதுவரை விஜய் நடித்தப் படங்களிலேயே மிக அதிகம் என்கிறார்கள் ரத்னத்தின் அலுவலகத்தில். படத்தின் பட்ஜெட் ஏறக்குறைய நாற்பது கோடியாம். இத்தனை காஸ்ட்லி படத்தில் விஜய் இதுவரை நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கர் பிலிம்சின் வேலாயுதம் படத்துக்குப் பிறகு இந்த மெகா புராஜெக்ட் தொடங்கப்படும் என்கிறார்கள். விஜய்யின் ஜோடி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
søndag den 18. juli 2010
torsdag den 15. juli 2010
onsdag den 14. juli 2010
tirsdag den 13. juli 2010
mandag den 12. juli 2010
søndag den 11. juli 2010
ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்
கலைஞர் இசையருவி தொலைக்காட்சி சார்பில் ஆண்டுதோறும் இசைக்கலைஞர்கள், மற்றும் இசைக்கேற்ப நடித்தவர்கள் உள்ளிட்ட கலைஞர்களுக்கு பாராட்டு விழா நடத்தி விருதுகள் வழங்கப்படுகிறது.
சென்னையில் நடந்த கலைஞர் இசையருவி தொலைக்காட்சி விழாவில் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அபிமான நடிகர் என்ற விருதினை, தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
torsdag den 8. juli 2010
onsdag den 7. juli 2010
விஜய் படப்பெயர் மாற்றம்
விஜய்யின் ஐம்பத்தியொன்றாவது படம் காவல்காரன். சித்திக் படத்தை இயக்க அசின் ஜோடியாக நடிக்கிறார்.
சித்திக் மலையாளத்தில் இயக்கிய பாடிகாட் படமே காவல்காரனாக தமிழில் உருவாகியுள்ளது. மலையாளத்தில் திலீப் நடித்த வேடத்தில் விஜய்யும், நயன்தாரா நடித்த வேடத்தில் அசினும் நடித்துள்ளனர். படத்தில் ரோஜாவும் ராஜ்கிரணும் இருக்கிறார்கள்.
தற்போது இந்தப் படத்தின் பெயரை காவல்காரன் என்பதற்குப் பதிலாக காவல் காதல் என்று மாற்றியுள்ளனர்
tirsdag den 6. juli 2010
வேலாயுதம்-பிரமாண்ட தொடக்க விழா
விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்துக்கு பிரமாண்ட தொடக்க விழாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளார் அதன் தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்.
காதலுக்கு மரியாதை என்ற மெகா ஹிட் படத்தை தயாரித்தவர் ரவிச்சந்திரன். அப்படத்துக்குப் பின்னர் மீண்டும் விஜய்யுடன் இணைகிறார் வேலாயுதம் மூலமாக.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் ஜெனிலியா. நாடோடிகள் புகழ் அனன்யா முக்கியப் பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இயக்குநராக செயல்படுகிறார் ஜெயம் ராஜா.
விஜய்யின் 50வது படத்திலேயே ராஜா இணைந்திருக்க வேண்டியது. ஆனால் சுறா படத்திற்காக விஜய் போய் விட்டதால் தற்போது 52வது படத்தில் இணைகிறார் ராஜா.
இப்படத்தின் தொடக்க விழாவை பிரமாண்டமாக நடத்துகிறார் ரவிச்சந்திரன். ஜூலை 15ம் தேதியன்று, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் காலை 9 மணிக்கு பத்தாயிரம் ரசிகர்கள் புடை சூழ தொடக்க விழா நடைபெறுகிறது.
வருகிற ரசிகர்களுக்கு தலா ஒரு விஜய் படம் போட்ட பனியனை அன்பளிப்பாக தருகிறார்கள். மேலும் அனைவருக்கும் பிரியாணி விருந்து கொடுத்த உபசரிக்கிறார் ரவிச்சந்திரன்.
விஜய்யின் மிகப் பிரமாண்டமான படங்களில் ஒன்றாக இது அமையும் என்று ரவிச்சந்திரன் தரப்பு கூறுகிறது.
fredag den 2. juli 2010
torsdag den 1. juli 2010
Abonner på:
Opslag (Atom)