tirsdag den 6. juli 2010

வேலாயுதம்-பிரமாண்ட தொடக்க விழா


விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்துக்கு பிரமாண்ட தொடக்க விழாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளார் அதன் தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்.

காதலுக்கு மரியாதை என்ற மெகா ஹிட் படத்தை தயாரித்தவர் ரவிச்சந்திரன். அப்படத்துக்குப் பின்னர் மீண்டும் விஜய்யுடன் இணைகிறார் வேலாயுதம் மூலமாக.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் ஜெனிலியா. நாடோடிகள் புகழ் அனன்யா முக்கியப் பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இயக்குநராக செயல்படுகிறார் ஜெயம் ராஜா.

விஜய்யின் 50வது படத்திலேயே ராஜா இணைந்திருக்க வேண்டியது. ஆனால் சுறா படத்திற்காக விஜய் போய் விட்டதால் தற்போது 52வது படத்தில் இணைகிறார் ராஜா.

இப்படத்தின் தொடக்க விழாவை பிரமாண்டமாக நடத்துகிறார் ரவிச்சந்திரன். ஜூலை 15ம் தேதியன்று, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் காலை 9 மணிக்கு பத்தாயிரம் ரசிகர்கள் புடை சூழ தொடக்க விழா நடைபெறுகிறது.

வருகிற ரசிகர்களுக்கு தலா ஒரு விஜய் படம் போட்ட பனியனை அன்பளிப்பாக தருகிறார்கள். மேலும் அனைவருக்கும் பிரியாணி விருந்து கொடுத்த உபசரிக்கிறார் ரவிச்சந்திரன்.

விஜய்யின் மிகப் பிரமாண்டமான படங்களில் ஒன்றாக இது அமையும் என்று ரவிச்சந்திரன் தரப்பு கூறுகிறது.

Ingen kommentarer:

Send en kommentar