
விக்ரமை இயக்கும் திட்டம் கை நழுவியதால் தனது பார்வையை விஜய் பக்கம் திருப்பியிருக்கிறார் யாவரும் நலம் இயக்குனர் விக்ரம் கே.குமார் என சில நாட்கள் முன்பு எழுதியிருந்தோம். விஜய் நடிக்க விக்ரம் கே.குமார் இயக்கும் படம் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டது.
மெகா பட்ஜெட்டில் தயாராகவிருக்கும் இந்தப் படத்தை தயாரிப்பவர் பல ஹிட் படங்களை தந்த ஸ்ரீசூர்யா மூவிஸ் ஏ.எம்.ரத்னம். சில காலம் படத்தயாரிப்பிலிருந்து விலகியிருந்த இவர் தனது ரீஎண்ட்ரியை பிரமாண்டமாக அமைக்க அத்தனை ரிஸ்க்கையும் எடுத்து வருகிறார்.
விக்ரம் கே.குமார் இயக்கும் படத்தின் பட்ஜெட் இதுவரை விஜய் நடித்தப் படங்களிலேயே மிக அதிகம் என்கிறார்கள் ரத்னத்தின் அலுவலகத்தில். படத்தின் பட்ஜெட் ஏறக்குறைய நாற்பது கோடியாம். இத்தனை காஸ்ட்லி படத்தில் விஜய் இதுவரை நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கர் பிலிம்சின் வேலாயுதம் படத்துக்குப் பிறகு இந்த மெகா புராஜெக்ட் தொடங்கப்படும் என்கிறார்கள். விஜய்யின் ஜோடி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
Ingen kommentarer:
Send en kommentar