onsdag den 11. august 2010

புதுப்பொலிவுடன் விஜய்


இளைய தளபதி விஜய் தற்போது புதுப்பொலிவுடன் களமிறங்கியிருக்கிறார். “ப்ரண்ட்ஸ்” என்ற மெகா ஹிட் படத்தை இயக்கிய சித்திக் இயக்கத்தில் “காவல் காதல்” என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். கிட்டதட்ட முடியும் தருவாயில் உள்ள “காவல் காதல்” தீபாவளி விருந்தாக திரைக்கு வரவிருக்கிறது.

ஜெயம் ராஜா இயக்கத்தில் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவ...ிச்சந்திரன் தயாரிப்பில் பிரமாண்டமாக தொடங்கியிருக்கிறது விஜய்யின் “வேலாயுதம்”. அடுத்து ஜெமினி பிலிம்ஸ்க்கு கால்சீட் கொடுத்துள்ள விஜய் 3 இடியட்ஸ் ரீமேக்கில், முதல் முறையாக பிரமாண்ட இயக்குனர் ஷ்ங்கர் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை வரும் நவம்பர் மாதம் துவங்கவிருக்கிறார்கள்.

கலைப்புலி தாணு தயாரிப்பில் சச்சின் படத்திற்கு பிறகு மீண்டும் நடிக்கவிருக்கிறார் விஜய். பகலவன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குபவர் தம்பி புகழ் இயக்குனர் சீமான்.

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் விஜய். இந்த படத்தை தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறது. இதனையடுத்து ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் யாவரும் நலம் விக்ரம்.கே.குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இளைய தளபதி. இனி வெளிவரும் ஒவ்வொரு படமும் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து ரசிகர்களையும் திருப்திபடுத்தும் படங்களாக இருக்கும் என்று விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்ரன.

Ingen kommentarer:

Send en kommentar