lørdag den 14. august 2010
காவலன்
இளைய தளபதி விஜய் – அசின் நடிக்கும் காவல் காதல் படத்தின் பெயர் தற்போது மீண்டும் மாறியுள்ளது. இந்த படத்தின் பெயர் தற்போது "காவலன்" என மாற்றப்பட்டுள்ளது.சித்திக் மலையாளத்தில் இயக்கி வெற்றி கண்ட பாடிகார்டு படத்தை, விஜய்க்கேற்ற வகையில் மாறுதல் செய்து தமிழில் எடுத்து வருகிறார்கள். மலையாளப் படத்தை இயக்கிய அதே சித்திக்தான் தமிழ்ப் படத்தையும் இயக்குகிறார்.
இந்தப் படத்துக்கு முதலில் காவல்காரன் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால் இதற்கு சத்யா மூவீஸ் எதிர்ப்பு தெரிவித்ததால், பெயரில்லாமலேயே எடுத்து வந்தார்கள். பின்னர் காவல் காதல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.ஆனால் காவல் காதல் தலைப்பு ஹீரோ விஜய்க்கு கொஞ்சமும் திருப்தியில்லையாம். இதைத் தொடர்ந்து இப்போது படத்துக்கு "காவலன்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இயக்குநர் சித்திக். இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குநர் சக்தி சிதம்பரம் வாங்கியுள்ளார்.
Abonner på:
Kommentarer til indlægget (Atom)
Ingen kommentarer:
Send en kommentar