fredag den 12. november 2010

டிசம்பர் 6ம் தேதி தமிழ் '3 இடியட்ஸ்' துவக்கம்!


விஜய் நடிக்க, ஷங்கர் இயக்கும் 3 இடியட்ஸ் தமிழ் ரீமேக் வரும் டிசம்பர் 6ம் தேதி சென்னை யில் துவங்குகிறது.

ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் நாயகர்களாக நடிக்கின்றனர்.

இலியானா கதாநாயகியாக நடிக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இலியானாவின் தந்தை வேடத்தை அவர் செய்கிறார் என்று முதல்கட்டத் தகவல்கள் கூறுகின்றன.

இந்தப் படத்தின் கதை விவாதம் முடிந்து, நடிகர்களை ஒப்பந்தம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக சமீபத்தில் சென்னை வந்த இலியானாவுக்கு தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளுக்கும் சேர்த்து ரூ 1.5 கோடி தர தயாரிப்பாளர்கள் சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது.

Ingen kommentarer:

Send en kommentar