mandag den 29. november 2010
விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!!
நடிகர் விஜய்க்கு கேரளாவில் சிலை வைத்துள்ளனர் அம்மாநில ரசிகர்கள்.
தமிழகத்துக்கு அடுத்து விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பது கேரளாவில்தான். இவரது கில்லி, போக்கிரி போன்ற படங்கள் கேரளத்தில் 100 நாட்கள் ஓடின. வேட்டைக்காரன் போன்ற படங்களும் ஓரளவு நன்றாகவே ஓடின கேரளாவில்.
விஜய் படங்கள் ரிலீஸ் ஆகும்போது, கட் அவுட், தோரணம், பேனர், பாலாபிஷேகம் என அமர்க்களப்படுத்துகிறார்கள் அங்கும்.
இப்போது தமிழ் ரசிகர்களுக்கு ஒருபடி மேலே போய் விஜய்க்கு ஒரு பெரிய சிலையே வைத்துள்ளனர் கேரளாவில்.
இந்த சிலை கை கால்கலை அசைக்கும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. விஜய் பாட்டுக்கு இந்த விஜய் சிலை கை கால்களை ஆட்டி நடனமெல்லாம் ஆடுமாம்.
சமீபத்தில் ஒத்தப்பாலம் அருகே தனது காவலன் படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடம் இந்த சிலையை ஒரு தேரில் வைத்து இழுத்து வந்து காட்டினார்களாம் ரசிகர்கள். இதைப் பார்த்து நெகிழ்ந்த விஜய், அந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஷோரனூரில் இப்போது அந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் ஒரு தமிழ் நடிகருக்கு சிலை வைக்கப்படுவது இதுவே முதல்முறை என்கிறார் விஜய்யின் மேனேஜரும் பிஆர்ஓவுமான பிடி செல்வகுமார்.
"விஜய் சிலையைக் காண நிறைய பேர் தினமும் வருவதால், ஷோரனூர் புதிய சுற்றுலா மையம் போல ஆகிவிட்டதாக கேரள மக்களே கூறுகின்றனர்", என்கிறார் செல்வகுமார்.
Abonner på:
Kommentarer til indlægget (Atom)
Ingen kommentarer:
Send en kommentar