onsdag den 27. april 2011

வேலாயுதம் ஹைலைட்: விஜய், ஹன்சிகா முத்தக்காட்சி


வேலாயுதம் படத்தில் எத்தனையோ ஹைலைட்டான விடயங்கள் இருக்க அதில் ஹன்சிகா மோத்வானி, விஜய்க்கு கொடுத்துள்ள ஒரு சின்ன முத்தக் காட்சி கொலிவுட்டை கலக்க ஆரம்பித்துள்ளது.
இப்படத்தில் விஜய்க்கு இரண்டு நாயகிகள், ரூ. 2 கோடி செலவில் ஒரு பாடல் காட்சி, பிரமாண்டமான சண்டைக் காட்சி, ஓட்டப் பந்தயக் காட்சி என ஏகப்பட்ட ஹைலைட்ஸ்கள் உள்ளன வேலாயுதத்தில்.


அதே சமயம், அதை விட சூப்பர் ஹிட்டாக பேசப்படுவது ஹன்சிகா கொடுத்துள்ள முத்தம் தான். இப்படத்தில் விஜய்க்கு படு சூடான முத்தம் கொடுத்துள்ளாராம் ஹன்சிகா. அதாவது விஜய்யின் உதடுகளுக்கு வெகு நெருக்கமாக வந்து முத்தமிடுவது போல இந்தக் காட்சி இருக்கிறதாம். இது ரசிகர்களை வெகுவாக கிளுகிளுப்பூட்டும் என்கிறார்கள் யூனிட்டில்.

இதுவரை இல்லாத அதிரடிப் படமாக வேலாயுதம் உருவாகிறது என்று கொலிவுட்டில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள். இப்படத்தில் இன்னொரு ஹைலைட் என்னவென்றால் இப்படத்தின் வில்லன்கள். கிட்டத்தட்ட 15 வில்லன்கள் இப்படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் பால்காரர் வேடத்தில் நடிக்கிறார் விஜய். சரண்யா மோகன் அவரது தங்கையாக வருகிறார்.

படத்தில் கொமெடி பட்டையைக் கிளப்பும் வகையில் அமைந்துள்ளதாம். சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, பாண்டியராஜன், ராகவ் ஆகியோர் கொமெடிக்குக் கை கோர்த்துள்ளனர். வழக்கமான வடிவேலு படத்தில் இல்லாத குறையை இவர்கள் நிவர்த்தி செய்து விடுவார்கள் என்கிறார்கள். படத்தின் பெரும்பாலான பகுதிகளை முடித்துவிட்டனர். இறுதிக்காட்சி மட்டுமே பாக்கி உள்ளதாம்.

lørdag den 23. april 2011

பரபர ஷூட்டிங்... ரிலீசுக்கு தயாராகும் வேலாயுதம்


விஜய்யின் அடுத்த படமான வேலாயுதம் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துவிட்டது. அதே நேரம் படத்தின் விளம்பரப் பணிகளையும் படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஆரம்பித்துள்ளார். விஜய்யின் பிறந்த நாளன்று இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் ரவிச்சந்திரன்.


விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஜெனிலியா மற்றும் ஹன்ஸிகா நடித்துள்ளனர். பாண்டியராஜன், சரண்யா மோகன், சந்தானமும் படத்தில் உண்டு. ஜெயம் ராஜா இயக்கியுள்ளார்.

இந்தப் படம் தொடர்பாக ஆஸ்கர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்தப் படத்தில் பால்காரராக நடித்துள்ளார் விஜய். ஜெனிலியா பெண் பத்திரிகை நிருபராகவும், ஹன்ஸிகா விஜய்யின் காதலியாகவும் நடித்துள்ளனர். 5 பாடல்கள், 6 அதிரடி சண்டைகள் இடம்பெற்றுள்ளன. விஜய்யின் பிறந்த நாளன்று இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்,"என்று கூறியுள்ளார்.

விஜய் பிறந்த நாள் ஜூன் 22 ம் தேதி ஆகும்.

velayutham stills...





விஜய் படத்துக்கு கட் சொல்ல மறந்த டைரக்டர்


ஓஸ்கர் தயாரிப்பில் விஜய் நடிப்பில் 'வேலாயுதம்' படம், எம்.ராஜா இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது.
விஜய், ஜெனிலியா, ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ளனர். வில்லன்களின் பெயர்களை மட்டும் மறைத்து வைத்துள்ளார்களாம்.
இளைஞன் ஒருவன் தலைவனாக உயர்கிறான் என்பதை சொல்கிறது வேலாயுதம் படம்.

கிராமமும் நகரமுமாக மாறி, மாறிப்பயணம் செய்கிற கதை. இது முக்கோண காதல் கதை.

அண்ணன், தங்கை பாசத்தை அழகாகவும் புது விதமாகவும் சொல்லும் படம் இது.

இது ஒரு ஆக்ஸன் படம் மட்டுமல்ல. நாயகன், நாயகியர்கள் அழகான நடிப்பை வெளிப்படுத்தும் படம்.

நல்லதொரு கதை சொல்லும் படமாகவும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படமாகவும் இருக்கும்.

கிராமத்து இளைஞனாக, பால்காரனாக கதாநாயகன் விஜய் நடித்துள்ளார். ஊரின் சுவாசத்துக்கு காற்றாக நாயகன் விஜய் வலம் வருகிறார்.

காதல், பாசம் உள்ள ஆவேச இளைஞனாக சில இடங்களில் உணர்ச்சி வசப்பட்டு நடித்துள்ளார். நாயகி ஜெனிலியா 'பத்திரிக்கை நிருபராக' வருகிறார்.

இன்னொரு நாயகி ஹன்சிகா பொதுத்துறையில் உள்ள பெண்ணாக நடித்துள்ளார். விஜய் நடிப்பில் வளர்ந்து வரும் வேலாயுதம் படத்தை இயக்கும் போது,சில இடங்களில் 'கட்' சொல்ல மறந்துள்ளேன் என்று வேலாயுதம் பட இயக்குனர் எம்.ராஜா கூறியுள்ளாராம்.

lørdag den 9. april 2011

onsdag den 6. april 2011

ரூ.1.25கோடியில் வேலாயுதம் படத்தின் முதல் பாடல்


விஜய் நடிப்பில் வேகமாக வளர்ந்து வரும் வேலாயுதம் படத்தின் ஓபனிங் சாங் ரூ.1.25கோடியில் சுமார் 1000 நடன கலைஞர்களுடன் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது.
காவலன் படத்திற்கு அடுத்து ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் படம் வேலாயுதம்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானியும், ஜெனிலியாவும் நடித்து வருகின்றனர். விஜய்யின் தங்கையாக சரண்யா மோகன் நடிக்கிறார்.

ஜெயம், எம்.குமரன் சன் ஆப் மகாலெட்சுமி போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் ராஜா இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் சண்டைக்காட்சிக்காக ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் டாம் டெல்மரை வைத்து சண்டைக்காட்சியை படமாக்கினர்.

இந்த சண்டைகாட்சியை முடித்த கையோடு, படத்தின் ஓபனிங் சாங்கையும் எடுத்துவிட்டார் ராஜா. புரியாத சொல்லுக்குள். என்று ஆரம்பிக்கும் இப்படத்தின் ஓபனிங் சாங்கிற்காக விஜய்யுடன் சேர்ந்து சுமார் 1000 நடன கலைஞர்கள் ஆடியுள்ளனர்.

இந்த ஒரு பாட்டை மட்டும் ரூ.1.25 கோடியில் மிக பிரம்மாண்டமாக எடுத்து இருக்கிறார் டைரக்டர் ராஜா.

இதனிடையே படத்தின் ஆடியோ எப்போது வெளியிடப்படும் என்று ஏங்கி போய் இருக்கின்றனர் ரசிகர்கள்.

ஏற்கனவே இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி 4பாடல்களை கம்போசிங் பண்ணி முடித்துவிட்டார். இதனால் இம்மாதம் ஏப்ரல் 31ம் திகதி ஓடியோ வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

mandag den 4. april 2011

தீபாவளிக்கு ரிலீசாகிறது நண்பன்


பொதுவாக ஷங்கர் படம் என்றாலே முடிவதற்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகும். ஆனால் இப்போது இவரது இயக்கத்தில் வேகமாக உருவாகி வரும் “நண்பன்” படம் ஓராண்டிற்கு உள்ளே முடியும் என்றும், இப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று கூறப்படுகிறது.இந்தியில் சக்கபோடு போட்ட “3-இடியட்ஸ்” படம் தமிழில் “நண்பன்” என்ற பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா ஆகியோர் நடித்து வருகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஷங்கர் எப்பவும் தன்னுடைய படங்களை குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது எடுப்பார். ஆனால் நண்பன் பட சூட்டிங்கோ ஜெட் வேகத்தல் சென்று கொண்டு இருக்கிறது.
கடந்த மாதம் தான் ஊட்டியில் தனது சூட்டிங்கை துவக்கினார். ஆனால் அதற்குள் 2கட்ட சூட்டிங்கை முடித்துவிட்டார். இன்னும் சிலதினங்களில் மூன்றாம் கட்ட சூட்டிங்கை ஆரம்பிக்க இருக்கிறார். அத்துடன் படத்திற்கான இசையமைப்பு வேலையும் வேகமாக நடைபெற்று வருகிறது. நண்பன் படத்திற்காக தற்போது லண்டனில் மியூசிக் கம்போசிங் பணியில் ஈடுபட்டு இருக்கும் ஹாரிஸ், இரண்டு பாடல்களை கம்போசிங் பண்ணி முடித்துவிட்டார். விரைவில் மீதி பாடல்களையும் முடிக்க இருக்கிறார். இதனால் படத்தின் ஆடியோவை செம்படம்பர் மாதம் வெளியிட முடிவுசெய்துள்ளனர். அத்துடன் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டு இருக்கின்றனர்.