lørdag den 23. april 2011
பரபர ஷூட்டிங்... ரிலீசுக்கு தயாராகும் வேலாயுதம்
விஜய்யின் அடுத்த படமான வேலாயுதம் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துவிட்டது. அதே நேரம் படத்தின் விளம்பரப் பணிகளையும் படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஆரம்பித்துள்ளார். விஜய்யின் பிறந்த நாளன்று இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் ரவிச்சந்திரன்.
விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஜெனிலியா மற்றும் ஹன்ஸிகா நடித்துள்ளனர். பாண்டியராஜன், சரண்யா மோகன், சந்தானமும் படத்தில் உண்டு. ஜெயம் ராஜா இயக்கியுள்ளார்.
இந்தப் படம் தொடர்பாக ஆஸ்கர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்தப் படத்தில் பால்காரராக நடித்துள்ளார் விஜய். ஜெனிலியா பெண் பத்திரிகை நிருபராகவும், ஹன்ஸிகா விஜய்யின் காதலியாகவும் நடித்துள்ளனர். 5 பாடல்கள், 6 அதிரடி சண்டைகள் இடம்பெற்றுள்ளன. விஜய்யின் பிறந்த நாளன்று இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்,"என்று கூறியுள்ளார்.
விஜய் பிறந்த நாள் ஜூன் 22 ம் தேதி ஆகும்.
Abonner på:
Kommentarer til indlægget (Atom)
Ingen kommentarer:
Send en kommentar